Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்ன தான் நல்ல படம் எடுத்தாலும் மக்கள் குறையைத்தான் பேசுராங்க..எச் வினோத் வேதனை!
சென்னை : என்ன தான் நல்ல படங்கள் எடுத்தாலும் மக்கள் குறையைத்தான் பேசுராங்க என்று எச் வினோத் பேட்டியில் வேதனையை பகிர்ந்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை,வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சந்திரன், மமதி சாரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
துணிவு அயோக்கியர்களின் ஆட்டம்.. ஹெச் வினோத் சொன்னத பாருங்க!

துணிவு
பஞ்சாபில் நடந்த வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு,டப்பிங் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கையில் துப்பாக்கியுடன்
அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், நேற்று துணிவு படத்திலிருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில் கையில் துப்பாக்கி வைத்து கொண்டு மாஸாக லுக்கில் அஜித் இருக்கிறார். அஜித்தின் புதிய போஸ்டரை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய நடிகர்களுக்கு ஏற்றமாதிரி
இந்நிலையில், துணிவு படம் குறித்து படத்தின் இயக்குநர் எச் வினோத் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த போட்டியில், ஒரு பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் போது, அவர்களுக்கு ஏற்றார் போல கதையும், எழுத்தும் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நல்ல கதை மட்டும் இருந்தால் போதாது. படம் பார்க்கும் ரசிகர்களும் பாசிடிவான எண்ணத்தை வரவைக்க வேண்டும்.

படத்தை குறை சொல்கிறார்கள்
வலிமை படம் வெளியான போது பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். படம் வெளியான முதல் இரண்டு நாளில், விமர்சனங்கள் மோசமாக வந்தன. ஆனால், மூன்றாவது நாளில் குடும்பத்துடன் மக்கள் தியேட்டருக்கு வந்ததை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. என்ன தான் நல்ல படம் எடுத்தாலும், படத்தில் இருக்கும் குறையைத்தான் பேசுராங்க இது வேதனையாக இருக்கிறது.

குறையை மட்டுமே பார்க்கிறார்கள்
சதுரங்கவேட்டை, தீரன் போன்ற படங்களை எடுங்கள் என்கிறார்கள். ஒரே மாதிரி கதையை திரும்ப திரும்ப எடுத்தால், இந்த இயக்குநர் இப்படித்தான் படம் எடுப்பார் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் படங்களில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும் குறையை மட்டும் பார்க்காமல் நிறைகளை மக்கள் பார்க்க வேண்டும்.

பணம் தான் கரு
இந்த படத்தை முதலில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கவே நான் விரும்பினேன். அஜித்திடம் இந்த கதையை கூறினேன், அவர் நான் நடிக்கவா என்றார் அப்படித்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. இது பணத்தை பற்றிய படம், பணத்தை தினமும் பயன்படுத்துகிறோம். அனால் அது என்ன? எப்படி வேலை செய்கிறது என கேட்டால் நமக்கு தெரியாது. இதுதான் துணிவு படத்தின் கரு என கூறியுள்ளார்.

அஜித் நல்ல மனிதர்
அஜித் ஒரு சிறந்த நல்ல மனிதர், சக மனிதர்களிடம் நேயத்துடன் மதித்து நடக்கும் பண்பு கொண்டவர். அரசியல் விவகாரத்திளோ, தனிப்பட்ட விவகாரங்களோ அவர் பேசி நான் பார்த்ததில்லை. யாராவது இது போன்ற பேச்சுக்களை எடுத்தால் கூட அவர் கண்ணியமாக அதை நிறுத்தி, இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவே மாட்டார் என்றார்.