அஜீத் சண்டை காட்சியில் ‘டூப்‘ போடல..எச் வினோத் சொன்ன துணிவு சீக்ரெட்ஸ்!

சென்னை : நடிகர் அஜித் துணிவு படத்தில் பல காட்சிகளில் டூப் போடாமல் அவரே நடித்தார் என்று எச் வினோத் கூறியுள்ளார்.

பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளையை வைத்து உருவாகி உள்ள திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, வலிமை படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கி உள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலம், அஜித், போனி கபூர், எச் வினோத் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

துணிவு

துணிவு

அஜித்தின் துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா இன்று வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 12ம் தேதி துணிவு திரைப்படம் இங்கிலாந்தில் வெளியாகப் போவதாக அதன் விநியோகஸ்தர்கள் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கற்பனைக்கதை

கற்பனைக்கதை

இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் இயக்குநர் அளித்துள்ள பேட்டியில், துணிவு படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பஞ்சாப் வங்கிக் கொள்ளை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையில்லை, துணிவு படத்தின் கதை ஒரு கற்பனைக்கதை.

டூப் போடாமல் சண்டை காட்சியில்

டூப் போடாமல் சண்டை காட்சியில்

துணிவுத் திரைப்படத்தை குடும்பத்தோடு அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், அஜித்தை இந்த படத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார். பல அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். சண்டை காட்சியின் போது அவரது முட்டி வீங்கி விட்டது, ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஒரு இனிய அனுபவம்

ஒரு இனிய அனுபவம்

அதே போல படத்தின் நாயகியாக வரும் மஞ்சு வாரியர் அஜித்தின் காதலி இல்லை, அவர் அஜித் குழுவில் ஒருவராக நடித்துள்ளார். அவரும் சண்டைக் காட்சியில் மிரட்டி இருக்கிறார். அஜித்துடன் பணியாற்றியது இனிய அனுபவம். எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், சக மனிதர்களை எப்படி மதிப்பது, விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படி, என்பதை அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். துணிவுத்திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும், அவரது ரசிகர்களை கவரும் வகையில் சுவாரசியமாக பல காட்சிகள் இருக்கு என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X