அந்த பக்கம் எஸ்.ஜே சூர்யா.. இந்த பக்கம் ராகவா லாரன்ஸ்.. மிரட்டலாக வெளியானது ஜிகர்தண்டா 2 டீசர்!

சென்னை : ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது. அதனை இணையத்தில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

2014ம்ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையும் விமர்சகர்களின் பெரும் மதிப்பையும் வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய குறும்படங்கள், திரைப்படங்கள் அனைத்தும் மக்களை கவரும் வகையில் இருந்தன. குறும்படங்களை இயக்கிய கார்ததிக் சுப்புராஜ் பீட்சா திரைப்படத்தை மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கினார். இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

பீட்சா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, இரண்டாவதாக ஜிகர்தண்டா என்ற பெயரில் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்தார். அதாவது, ஒரு தாதாவின் வாழ்க்கையை திரைப்படமான எடுக்க நினைக்கும் ஒரு இயக்குநர் சுவாரஸ்யமான கதையைத் தேடி மதுரையில் ஒரு தாதாவை சந்திக்கிறார். நகைக்சுவையான இந்த திரைப்படத்திற்கு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது.

ஜிகர்தண்டா 2

ஜிகர்தண்டா 2

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளான நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் எஸ்.கே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பான் இந்தியா ஸ்டார் ஒருவர் கமிட் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

டிரெண்டாகும் டீசர்

டிரெண்டாகும் டீசர்

இந்நிலையில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் டீசரில், ஷூட் கோட் போட்டுக்கொண்டு இருக்கும் எஸ்.ஜே சூர்யா, இரும்பு பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் ராகவா லாரன்சை பிடிப்பதற்காக பெரும் போலீஸ் படையுடன் வருகிறார். கையில் ஒற்றை துப்பாக்கி மட்டுமே வைத்திருக்கும் ராகவா லாரன்ஸ், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்தால், அவர் மண்ணுக்குள் கையைவிட்டு கேமிராவை எடுத்து சுடுகிறார்.

மிரட்டலான கெட்டப்பில் ராகவா லாரன்ஸ்

மிரட்டலான கெட்டப்பில் ராகவா லாரன்ஸ்

மூன்று 3 நிமிட டீசரைப் பார்த்த ரசிகர்கள், இந்த டீசரை இணையத்தில் டிராண்டாக்கி வருகின்றனர். வழக்கமாகவே எஸ்ஜே சூர்யா பின்னுவார் இதுல போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் செம தான் என்றும், மேலும் ராகவா லாரன்ஸ் பரட்டை தலை, மூக்குத்திடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இந்த கெட்டப்பை பரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X