லோகேஷ் கனகராஜின் புது பயணம்.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க.. திரும்பி பார்க்கும் கோலிவுட்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருந்த ஆசையால், வங்கி வேலையை விட்டு குறும்படத்தை இயக்கினார்.

filmmaker Lokesh Kanagaraj announced his production venture G Squad

அந்த குறும்படம் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் அவர் தயாரித்த அந்தோலஜி படமான அவியல் படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இதையடுத்து, மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் லோகேஷ் கனராஜ். வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி, இரண்டாவது படத்திலேயே மாஸ் இயக்குநர் என பெயர் எடுத்தார். அதன் பின் மாஸ்டர், விக்ரம் என வெற்றிப்படத்தை கொடுத்து ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திருப்பினார்.

தலைவர் 171: அண்மையில், விஜய்யை வைத்து இவர் இயக்கிய லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 171 வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

ஜி ஸ்குவாட்: இயக்குநராக மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,5 படங்களை இயக்கிய பின் தற்போது என்னுடைய தயாரிப்பு நிறுவனமான 'ஜி ஸ்குவாட்' (GSquad) அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கதைசொல்லலின் புதிய முறைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் இதனை அர்ப்பணித்திருக்கிறேன்.

ஆதரவளிக்க வேண்டும்: எனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் என்னுடைய முதல் சில தயாரிப்புகள் அமையும். இதுவரை எனக்கு நீங்கள் எப்படி ஆதரவளித்தீர்களோ அதேபோல, இந்தப் படைப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என லோகேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X