மஞ்சள் காமாலை நோய்.. கல்லீரல் பாதிப்பு.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!

By

ஐதராபாத்: பிரபல இயக்குனர் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் மாதவன், சங்கீதா, சீமான், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த, எவனோ ஒருவன் படத்தை இயக்கியவர், இந்திப் பட இயக்குனர் நிஷிகாந்த் காமத்.

இந்தப் படம் டோம்பிவிலி பாஸ்ட் என்ற மராத்தி படத்தின் ரீமேக். இந்த மராத்தி படத்தை இயக்கியவரும் நிஷிகாந்த் தான்.

ராக்கி ஹேண்ட்சம்

ராக்கி ஹேண்ட்சம்

பின்னர், மாதவன், சோஹா அலிகான், இர்பான் கான் நடித்த, மும்பை மேரிஜான், ஜான் ஆபிரகாம் நடித்த 'காக்க காக்க' ரீமேக்கான ஃபோர்ஸ், அஜய்தேவ்கன், தபு, ஸ்ரேயா நடிப்பில் த்ரிஷ்யம் ரீமேக், ஜான் ஆபிரகாம் நடித்த ராக்கி ஹேண்ட்சம் உட்பட பல படங்களை இயக்கினார். ராக்கி ஹேண்ட்சம் உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்தப் படம் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

லாய் பாரி, சாட்ச்யா ஆத் காரத் உள்பட சில மராத்தி படங்களையும் இயக்கியுள்ள நிஷிகாந்த்துக்கு கடந்த 31 ஆம் தேதி, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மஞ்சள் காமாலை நோய் இருப்பதை அறிந்தனர். அவர் வயிற்றிலும் கடுமையான பிரச்னை இருப்பது தெரியவந்தது.

தீவிரச் சிகிச்சை

தீவிரச் சிகிச்சை

அவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானதால் பரபரப்பானது. அவர் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது என்றாலும் நிலையாக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விரைவில் குணமடைய

விரைவில் குணமடைய

இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டுக்கு இது போதாத காலம் போல் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சோகங்களை சந்தித்து வருகிறது. பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிந்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இவரும் சிரீயசாக இருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X