கொரோனா தொற்றால் பாதிப்பு.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. குடும்பத்துக்கும் டெஸ்ட்!

By

மும்பை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்தாலும் கொரோனா தொற்று பரவி விடுகிறது.

இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை, 7 லட்சத்து 76 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பினர். நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவ்னீத் ராணா

நவ்னீத் ராணா

இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பிரபல பெங்காலி இயக்குனர் ராஜ் சக்கரவர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழில் வெளியான பல படங்களை பெங்காலியில் ரீமேக் செய்துள்ளார்.

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்

காதல் படத்தை சிரோதினி ட்மி ஜே அமர், 7ஜி ரெயின்போ காலனி படத்தை பிரேம் ஆமர் என்றும் சென்னை 2008 படத்தை லே சக்கா என்ற பெயரிலும் சிங்கம், எங்கேயும் எப்போதும், கோ, பொல்லாதவன் உள்பட பல படங்களையும் பெங்காலி மொழியில் ரீமேக் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ளேன்

பாதிக்கப்பட்டுள்ளேன்

இவர், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 'நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு சோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர் வீட்டில் தனிமைச் சிகிச்சையில் இருக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் சோதனை செய்ய இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X