For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சர்ச்சை நாயகன் ராம்கோபால் வர்மாவின் ‘லட்கி‘..பெண் புரூஸ்லி கதையா? படுமோசமான கவர்ச்சி போஸ்டர்!

  |

  சென்னை : பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாக உள்ளது.

  Recommended Video

  Ladki Movie Press Meet | RamGopal Varma | Pooja Bhalekar | *Kollywood

  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கில், ஆங்கிலம், இந்தி ஆகிய 6 மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்திற்கு 'பொண்ணு' என பெயர்வைக்கப்பட்டுள்ளது.

  இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான திரையரங்கில் வெளியாக உள்ளதாக ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

   சூர்யாவுக்குள் இருந்த ரோலக்ஸை கண்டுபிடித்தவர்..விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இயக்குநர் பாலா சூர்யாவுக்குள் இருந்த ரோலக்ஸை கண்டுபிடித்தவர்..விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இயக்குநர் பாலா

  ராம்கோபால் வர்மா

  ராம்கோபால் வர்மா

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவர். இவருடைய படங்கள் எப்போது வெளியானாலும் அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும்.

  சிக்கிக் கொள்வார்

  சிக்கிக் கொள்வார்

  பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்த இவர் சோஷியல் மீடியாவிலும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள்,அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து நடுங்குமாம். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஓபனாக பேசக்கூடியவர்.

  18+ திரைப்படங்கள்

  18+ திரைப்படங்கள்

  கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேகட் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம் சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களே எடுத்து வருகிறார்.

  லெஸ்பியன் கதை

  லெஸ்பியன் கதை

  கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் இருவர் ஆண்களை வெறுத்து ஒருவரை ஒருவர் காதலிக்கும் லெஸ்பியன் கதையை கையில் எடுத்திருந்தார். இத்திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியானது. இந்தியில் டேஞ்சரஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படமாகும். இதில், நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

  லட்கி: கேர்ள் டிராகன்

  லட்கி: கேர்ள் டிராகன்

  நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. ஆனால் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பல நாட்கள் தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது.

  என்னிடம் பணம் இல்லை

  என்னிடம் பணம் இல்லை

  அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. லட்கி: கேர்ள் டிராகன் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15ந் தேதிவெளியாக உள்ளது.

  English summary
  Filmmaker Ram Gopal Varma film Ladki: Girl Dragon July 15 Release date
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X