திடீர் மாரடைப்பு.. விமானத்துக்காக புறப்பட்டுக் கொண்டிருந்த இயக்குனர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

பெங்களூரு: திடீர் மாரடைப்பு காரணமாக பிரபல இயக்குனர் மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டு மோசமான காலகட்டமாக இருக்கிறது. பல பிரபலங்கள் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் உயிரிழக்கும் சினிமா துறையினரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சினிமா இழந்துள்ளது

சினிமா இழந்துள்ளது

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள சினிமா உலகம், முன்னணி கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்களை இழந்துள்ளது. இந்தி நடிகர்கள் இர்பான் கான், மூத்த நடிகர் ரிஷி கபூர், இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், பிரபல மலையாள இயக்குனர் சச்சி, பின்னணி பாடகர் எஸ்.பி.பி, வங்காள நடிகர் சவுமித்ர சாட்டர்ஜி உள்பட பலரை சினிமா இழந்துள்ளது.

சாஹூராஜ் ஷிண்டே

சாஹூராஜ் ஷிண்டே

கன்னட சினிமாவில், சிரஞ்சீவி சார்ஜா, இயக்குனர் விஜய் ரெட்டிராவ், இசை அமைப்பாளர் ராஜன், காமெடி நடிகர் ராக்லைன் சுதாகர் உள்பட சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல கன்னட பட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

சினேகனா பிரீத்தினா

சினேகனா பிரீத்தினா

இவர் பிரபல கன்னட ஹீரோ தர்ஷன், சஞ்சனா கல்ராணி நடித்த 'அர்ஜுன்', ஆதித்யா, ராய் லட்சுமி நடித்த, 'சினேகனா பிரீத்தினா' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் அடுத்து புதுமுகம் ஹீரோவாகவும் அதிதி பிரபுதேவா நாயகியாகவும் நடித்துள்ள சாம்பியன் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

ரங்கமந்திரா

ரங்கமந்திரா

பிரவீண் தேஜ், அனுபமா கவுடா, ஸ்ருதி பிரகாஷ் நடித்துள்ள ரங்கமந்திரா என்ற படத்தையும் அவர் முடித்துள்ளார். கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போயிருந்தது. இந்நிலையில் அவர், தனது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைக்காக நேற்று காலை விமானத்தில் மும்பை செல்ல இருந்தார்.

மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

அதற்காக வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கேயே அவர் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே இருதயம் தொடர்பான பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கன்னட திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X