ரியா சக்கரவர்த்தியின் வாழ்க்கை திரைப்படமாகிறது… 3 இயக்குனர்கள் வெயிட்டிங் !
சென்னை : பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த ரியா சக்கரவர்த்தி இப்பொழுது அதைவிட பிஸியாக செய்திகளில் தினந்தோறும் அடிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம், போதைப் பொருள் வழக்கு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ரியா சக்கரவர்த்தி போலீசாரின் தீவிர கண்காணிப்பில் பல்வேறு விசாரணைக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும் ரியா சக்கரவர்த்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க 3 இயக்குனர்கள் வெயிட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அச்சங்களும் பயங்களும்
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரானா தொற்று பற்றிய அச்சங்களும் பயங்களும் மக்களிடையே தோன்றியுள்ள நிலையில் அதேசமயம் பல சர்ச்சைக்குரிய விஷயங்களும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.

காதலி ரியா சக்கரவர்த்தி
அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

மற்றுமொரு சர்ச்சையில்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் முக்கிய குற்றவாளியாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் ரியா சக்கரவர்த்தி சமீபத்தில் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

போதைப் பொருட்கள்
பாலிவுட் நட்சத்திரங்கள் சொகுசு விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுது சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்கள் உபயோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் ரியா சக்கரவர்த்தி முக்கியமான நபராக சொல்லப்பட்டு அந்த விசாரணையும் இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

செய்திகளில் தினந்தோறும்
இதற்கு முன் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ரியா சக்கரவர்த்தி இப்பொழுது அதைவிட பிஸியாக செய்திகளில் தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறார். ரியா சக்கரவர்த்தியின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டே இருக்க பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை சந்தித்து வரும் ரியா சக்கரவர்த்தியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒப்புதல் பெற வெயிட்டிங்கில்
ஒன்றல்ல இரண்டல்ல மூன்று இயக்குனர்கள் ரியா சக்கரவர்த்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வரிந்துக்ட்டிக்கொண்டு இருக்கிறார்கள். படமாக எடுக்க கதையை தயார் செய்து உள்ளதாகவும், அதை விரைவிலேயே ரியாவை நேரில் சந்தித்து அவரது ஒப்புதல் பெற காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











