இப்ப வேணாம்.. அடுத்த வாரம் பாத்துக்கலாம்.. ஓவியா செம ஸ்மார்ட்
சென்னை: வருடக்கணக்கில் ஒட்டிய திரைப்படங்களே வெற்றிப்படம் என்றிருந்த காலம் போய், ஒரு வாரம் தாக்குப்பிடித்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் வளர்ச்சியால் இன்று ஒவ்வொரு ரசிகனும் விமர்சகர்கள் ஆகியுள்ளனர்.
படத்தை பற்றி பரவலாக விமர்சனங்கள் வருவதற்குள் முடிந்த வசூலை எடுக்க வேண்டும் என்பதே விநியோகஸ்தர்களின் எண்ணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டே படங்கள் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகின்றன. இது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரீலிஸ் ஆகவிருக்கும் ஓவியாவின் படம் 90எம் எல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், அடல்ட்ஸ் ஒன்லி படத்தில் நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது.

90 எம் எல்
இந்த படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர வந்த நிலையில், 90 எம் எல் படம் 22.2.19 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள்
அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. இதை கணக்கில் கொண்டே ஓவியா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்படங்களின் ரிலீஸ்
தேர்வு மாதம் என்பதால் புதுப்படங்களின் ரிலீஸ் குறைவாக இருக்கும். எனவே அடுத்த வாரம் வெளியானால் எப்படியும் மாதம் முழுவதும் திரையிடப்பட வாய்ப்பு அதிகம்.

அடுத்த வாரம் ரிலீஸ்
இதை பிளான் பண்ணியே ஸ்மார்ட் ஆக அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ளது 90 எம் எல். இதே போன்று அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம் திரைப்படமும் மார்ச் 1-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது


Click it and Unblock the Notifications











