twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொடூரமான கூடத்தாயி கொலை வழக்கை சினிமாவாக எடுப்பதா? மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு கோர்ட் சம்மன்

    By
    |

    திருவனந்தபுரம்: சொத்துக்காக 6 பேரை கொன்ற கூடத்தாயி கொலை வழக்கை, சினிமாவாக எடுத்த மோகன்லால் பட தயாரிப்பாளர் உட்பட 3 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள பகுதி கூடத்தாயி. இங்கு வசித்து வந்தவர் ஜான் தாமஸ். இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாவும், ஓய்வு பெற்ற ஆசிரியை.

    மகன் ரோய் தாமஸ் மற்றும், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் என இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

    வெற்றிநடை போட்ட 'அசுரன்'.. இரத்தம் சொட்டும் 100வது நாள் போஸ்டர் !வெற்றிநடை போட்ட 'அசுரன்'.. இரத்தம் சொட்டும் 100வது நாள் போஸ்டர் !

    அடுத்தடுத்து உயிரிழப்பு

    அடுத்தடுத்து உயிரிழப்பு

    2002 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்ததால், இதில் சந்தேகம் இருப்பதாக கோழிக்கோடு போலீசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சொத்தை அபகரிக்க

    சொத்தை அபகரிக்க

    அதன்படி உடல்களை தோண்டி ஆய்வு செய்தபோது 6 பேரின் உடல்களிலும் விஷம் இருந்தது உறுதியானது. சொத்தை அபகரிக்க மருமகள் ஜோலி செய்த காரியம்தான் இது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜோலி கைது செய்யப்பட்டார்.

    சூப்பில் சயனைடு

    சூப்பில் சயனைடு

    அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. சூப்பில் சயனைடு கலந்து கொன்றதாக தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கதையை மையமாக வைத்து இரண்டு சினிமா படங்களும் ஒரு டிவி சீரியலும் உருவாக்கப்பட்டு வந்தது.

    மோகன்லால்

    மோகன்லால்

    பிரபல தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் இதை இன்வெஸ்டிகேஷன் திரில்லாக தயாரிக்க இருப்பதாகவும் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் அறிவித்தார். படத்துக்கு கூடத்தாயி என்றே டைட்டில் வைத்தனர்.

    ஜோலி என்ற டைட்டில்

    ஜோலி என்ற டைட்டில்

    வாமோஸ் மீடியா என்ற நிறுவனம் ஜோலி என்ற டைட்டிலில் இதே கதையை வைத்து ஒரு படத்தை உருவாக்கி வந்தது. சேனல் ஒன்றும் சீரியலாக உருவாக்கி, 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்ப முடிவு செய்திருந்தது.

    தடை கோரி வழக்கு

    தடை கோரி வழக்கு

    இந்நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரி, கொல்லப்பட்ட ராய் தாமஸின் சகோதரி ரெஞ்சி, குற்றவாளியான ஜோலியின் மகன்கள் ரெமோ, ரோனால்ட் ஆகியோர் முனிசிப் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அந்த சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர்களை 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.

    English summary
    The Muncif–Magistrate court here summoned the makers of films and television serials on the controversial Koodathayi murder case. The makers were asked to appear before the court on Monday, January 13.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X