twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னப்பா.. இன்னும் அந்த 100 கோடியை எண்ணி முடிக்கலையா?

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்கள் ஒவ்வொரு முறை ரிலீசாகும்போதும், இந்தப் படம் வசூலில் சாதனை படைத்துவிட்டது. 100 கோடி வசூலைக் குவித்துவிட்டது என்றெல்லாம் அடித்துவிடுவார்கள்.

    பிரஸ் மீட் கூட வைப்பார்கள். அங்கே, தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி சார் பட வசூலை எங்கள் படம் தொட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் என்பார்கள்.

    சரி இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரமிருந்தா கொடுங்க என்றால்... இருங்க வந்ததும் தந்துடறோம் என்பார்கள். அதற்கடுத்த வாரங்களில் இந்தப் படம் தியேட்டர்களில் காத்து வாங்கும், புதிய படங்கள் வந்துவிடும், மக்களும் மறந்து தொலைப்பார்கள்.

    கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அப்படி 100 கோடி வசூலுக்குச் சொந்தம் கொண்டாடிய படங்களைப் பார்க்கலாம்...

    ஏழாம் அறிவு

    ஏழாம் அறிவு

    ஏஆர் முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளியான ரொம்ப சுமாரான படம். காட்சிகளில் அழுத்தமில்லாததாலும், ரொம்ப செயற்கையான திரைக்கதையாலும் சொதப்பியது. ஆனால் வசூலில் ரூ 100 கோடியைக் குவித்ததாகவும், எந்திரன், சிவாஜிக்கு அடுத்த இடம் ஏழாம் அறிவுக்குதான் என்றார்கள். ஆனால் இன்னும் அந்த 100 கோடிக்கு கணக்கு காட்டவே இல்லை!

    வேலாயுதம்

    வேலாயுதம்

    திருப்பாச்சி மாதிரி சராசரி மசாலா படம்தான் என்றாலும் தொடர்ந்து 6 தோல்விகளுக்குப் பிறகு விஜய்யை தூக்கி நிறுத்திய படம் இந்த வேலாயுதம். இந்தப் படத்தின் பிரஸ்மீட் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இதில்தான் விஜய்யின் மேனேஜர், வேலாயுதம் படம் வெளியான முதல் வாரத்திலேயே எந்திரன் வசூலைத் தாண்டி விட்டது என்றார். விஜய்யும் அமைதியாக சிரித்தபடி அதை ஆமோதித்தார். ஆதாரம் கேட்டபோது, நிச்சயம் தருகிறோம் என்றார்கள். ஆனால் ஆண்டொன்று கழிந்தும் அதற்கான ஆதாரங்களோ கணக்கோ சொன்னபாடில்லை!

    மங்காத்தா

    மங்காத்தா

    அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் ரூ 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்று கோடம்பாக்க புளுகுணிகள் ஓயாமல் சொல்லித் திரிய, அதை நம்பி பல பத்திரிகைகளும் அதே பொய்யை உண்மையாக்க முயன்றன. கடைசியில் குட்டு உடைந்தது. இந்தப் படம் ரூ 60 கோடியைத்தான் வசூலித்தது என்றார்கள். இப்போது எல்லோருக்கும் உண்மை தெரிந்தாலும், சரி முடிஞ்சது முடிஞ்சி போச்சு... இப்ப சொல்லி என்ன பண்றது? என்று விட்டுவிட்டு அடுத்த வசூல் கணக்கை எழுத ஆரம்பித்துள்ளனர்.

    நண்பன்

    நண்பன்

    இந்தப் படம் 2012-ம் ஆண்டின் வசூல் காமெடி என்று கூட சொல்லலாம். இந்தப் படத்தின் வசூல் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரே வாரத்தில் ரூ 100 கோடியைத் தொட்டு விட்டது வசூல். எந்திரனைத் தாண்டிவிட்டது என்றார்கள். நியாயமாக, நண்பன் வசூல் வேலாயுதத்தைதானே தாண்ட வேண்டும். இந்த 2012-லும் எந்திரனைத்தான் தாண்டனுமா.. என பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை.. அதுபற்றி நண்பன் ஹீரோவும் யோசிக்கவில்லை. அதற்கடுத்த வாரம் சொன்னார்கள், ஆந்திராவிலும் நண்பன் ரூ 100 கோடி தாண்டிவிட்டதென்று. ஆனால் இதற்கும் இன்று வரை கணக்கில்லை.

    பில்லா 2

    பில்லா 2

    இந்தப் படம் மகா மொக்கை என்று முதல் நாள் முதல் ஷோவிலேயே ரிசல்ட் வர, ரசிகர் மன்றத்துக்காக போட்ட ஒரு காட்சியிலேயே சுமார் 25 ஆயிரம் நஷ்டம் வந்தது ஒரு ரசிகருக்கு. ஆனால் இந்தப் படத்தையும் ரூ 100 கோடி வசூல் பட்டியலில் சிலர் சேர்த்துவிட்டதைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தாராம் அஜீத்!

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    இந்தப் படம் இந்த ஆண்டின் வெற்றிப் படம்தான், சந்தேகமில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு விசுவாசம் காட்டுவதாக நினைத்து சிலர் சிவாஜி, எந்திரன் வசூலையெல்லாம் தாண்டி எங்கேயோ போயிடுச்சி கலெக்ஷன் என பாக்ஸ் ஆபீஸ் கணக்கு என்று எதையோ காட்டினார்கள். நான்கைந்து நாட்கள் அமைதியாக இருந்த உதயநிதி, 'யப்பா ரீல் அந்து போச்சி.. சும்மா இருங்க' என சொல்லிவிட்டார் போலிருக்கிறது.. அடங்கிவிட்டார்கள்!

    இப்போ... ஹிஹி... துப்பாக்கி!!

    இப்போ... ஹிஹி... துப்பாக்கி!!

    படம் வெளியான மூன்றாவது நாளே, துப்பாக்கி தாறுமாறான வெற்றி..முதல் வாரமே ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டோம் என்று அறிக்கை விட்டுவிட்டார்கள். அதெப்டிப்பா... வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என மூன்றுக்குமே ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறீர்களே என்று மீடியாவும் கேட்கவில்லை... விஜய் அன் கோவும் பதிலளிக்கத் தயாரில்லை. சரி சரி... அடுத்து விஜய் அண்ட் விஜய் படம் வருகிறது. அதுவும் நிச்சயம் எந்திரனைத் 'தாண்டிவிடும்'!!

    English summary
    For the past two years, some of Vijay, Surya and Ajith's movies self claimed as they collected more than 100 cr in BO.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X