பாண்டியராஜன் படப் பெயர் மாற்றம்! நடிகர் ஜெயராம், பாண்டியராஜன் நடித்த பிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும் படத்தின் பெயர் சென்னை உயர்நீதிமன்றஉத்தரவின் காரணமாக, பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என்று மாற்றப்பட்டுள்ளது.லூயி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும். இப்படத்தின் பெயர் தங்களது சமூகத்தைஅவமதிப்பதாக உள்ளதாக கூறி நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளை சார்பில் பழனியப்பன் செட்டியார், சக்தி செட்டியார்இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.தங்களது மனுவில், இப்படத்தில் புகழ்பெற்ற கற்பகவிநாயகர் கோவில் காட்டப்படுகிறது. இது ஊரின் மதிப்பையும், எங்களதுசமூகத்தினரையும் அவமதிப்பதாக உள்ளது. மேலும் படத்தின் பெயரும், பிள்ளையார்பட்டி ஊருக்கு இழுக்காக அமையும்.எனவே இப்பெயரில் படம் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.மனுதாரர்கள் சார்பில் நளினி சிதம்பரம் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணதாசன் இருவரும்,படத்தின் பெயரை பிள்ளையார்குட்டியும், கந்துவட்டியும் என மாற்றுமாறு அறிவுரை கூறினார். ஆனால் அப்பெயரை ஏற்காததயாரிப்பாளர் தரப்பு பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என மாற்றுவதாக தெரிவித்தது.இதை மனுதாரர் தரப்பும், நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டதால் பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என்ற பெயரில் படத்தைத்திரையிடவும், கற்பகவிநாயகர் கோவில் உள்ளிட்டவற்றை காட்டகூடாது என்றும் கூறி தீர்ப்பளித்தனர்.

By Staff

நடிகர் ஜெயராம், பாண்டியராஜன் நடித்த பிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும் படத்தின் பெயர் சென்னை உயர்நீதிமன்றஉத்தரவின் காரணமாக, பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என்று மாற்றப்பட்டுள்ளது.

லூயி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும். இப்படத்தின் பெயர் தங்களது சமூகத்தைஅவமதிப்பதாக உள்ளதாக கூறி நாட்டுக்கோட்டை நகரத்தார் அறக்கட்டளை சார்பில் பழனியப்பன் செட்டியார், சக்தி செட்டியார்இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்களது மனுவில், இப்படத்தில் புகழ்பெற்ற கற்பகவிநாயகர் கோவில் காட்டப்படுகிறது. இது ஊரின் மதிப்பையும், எங்களதுசமூகத்தினரையும் அவமதிப்பதாக உள்ளது. மேலும் படத்தின் பெயரும், பிள்ளையார்பட்டி ஊருக்கு இழுக்காக அமையும்.எனவே இப்பெயரில் படம் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் நளினி சிதம்பரம் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணதாசன் இருவரும்,படத்தின் பெயரை பிள்ளையார்குட்டியும், கந்துவட்டியும் என மாற்றுமாறு அறிவுரை கூறினார். ஆனால் அப்பெயரை ஏற்காததயாரிப்பாளர் தரப்பு பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என மாற்றுவதாக தெரிவித்தது.

இதை மனுதாரர் தரப்பும், நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டதால் பிள்ளையார்பேட்டையும், கந்துவட்டியும் என்ற பெயரில் படத்தைத்திரையிடவும், கற்பகவிநாயகர் கோவில் உள்ளிட்டவற்றை காட்டகூடாது என்றும் கூறி தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X