twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழைய பாடல்கள்.... ஆடி அசத்திய இளம் நடிகர்கள்!

    By Mayura Akilan
    |

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் பழைய நடிகர், நடிகைகளும் இளம் நட்சத் திரங்களும் ஒன்றாக திரண்டு இருந்தனர்.

    சினிமா வரலாற்றை சித்தரிக்கும் வீடியோ பட காட்சிகள், ஆடல் பாடல் நடனங்கள் என சினிமா நூற்றாண்டு விழா மேடை குதூகலப்பட்டது.

    1960 கால கட்ட பாடல்களுக்கு இளம் நடிகர், நடிகைகள் லுங்கி, வேட்டி, சட்டை, சேலை என பழைய காஸ்ட்யூம்கள் அணிந்து ஆட்டம் போட்டது கூட்டத்தினரை கவர்ந்தது. ரஜினி, கமல் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து கை தட்டி ரசித்தனர்.

    எம்.ஜி.ஆர் புகழ் பாடிய சத்யராஜ்

    எம்.ஜி.ஆர் புகழ் பாடிய சத்யராஜ்

    சத்யராஜ் மேடையேறி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க, தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே என எம்.ஜி.ஆர். பாடல்களின் சிறப்புகளை பட்டியலிட்டார்.

    கறுப்பு சட்டை, வெள்ளை பேன்டில் நான் ஆணையிட்டால் பாட்டை எம்.ஜி.ஆர். பாடியது தனி அழகு என்றார்.

    ஸ்ரீகாந்த், இனியா, ஓவியா

    ஸ்ரீகாந்த், இனியா, ஓவியா

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆடி அசத்திய பழைய பாடல்களுக்கு ஸ்ரீகாந்த், இனியா, ஓவியா பழைய டான்ஸ் ஸ்டைலில் நடனம் ஆடி அசத்தினர்.

    அர்ஜூன் - தேவயானி

    அர்ஜூன் - தேவயானி

    பிறகு அர்ஜுன், தேவயானி, ரோஜா, லட்சுமிராய், போன்றோர் பொன்மகள் வந்தாள், வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா, அடி என்னடி ராக்கம்மா, யாரடி நீ மோகினி போன்ற சிவாஜி பாடல்களுக்கு ஆடி கவர்ந்தனர்.

    கார்த்தி - விஷால்

    கார்த்தி - விஷால்

    சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு, மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா, நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன், ஒரசிக்கும் சிமானே வா, வாங்க மச்சான் வாங்க வந்த வழியே பார்த்து போங்க போன்ற பாடல்களுக்கு இன்றைய காலத்து நடிகர்கள் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். கார்த்தி, விஷால், ஜீவா, ஹன்சிகா மோட்வானி, காஜல் அகர்வால், லட்சுமி மேனன் போன்ற இளம் நட்சத்திரங்கள் பழைய காஸ்ட்யூம்கள் அணிந்து நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

    சந்தானம் கலாட்டா

    சந்தானம் கலாட்டா

    காமெடி நடிகர் சந்தானம் மேடை ஏறி கார்த்தி அணிந்திருந்த லுங்கியை பார்த்து கோவாவில் கோதுமை தோசை விக்கிறவன் மாதிரி இருக்கிறீர் ஒய் என்க கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை.

    அமலாபால் – பிந்து மாதவி

    அமலாபால் – பிந்து மாதவி

    அமலாபால், பிந்துமாதவி, சாந்தனு, இக்காலத்து பாடல்களான டாக்சி டாக்சி, நாக்க முக்க நாக்கு முக்க, என் பேரு மீனா குமாரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.

    English summary
    Various film stars sang, danced and enacted dramas in the Indian film centenary function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X