உலக சினிமா... மாற்று சினிமா... - கதை பேசும் 'FOM' யூ-ட்யூப் குழு!

By Vignesh Selvaraj

திருவனந்தபுரம் : 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்பட விழா டிசம்பர் 8-ம் தேதி தொடங்கி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் நடைபெற்றது.

கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களின் சில நிமிட விமர்சனங்களை வீடியோ வழியாகச் செய்து வருகிறார்கள் 'Fistful of movies' எனும் யூ-ட்யூப் சேனல் குழுவினர்.

கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 30 சிறந்த படங்களை விமர்சனம் செய்து தங்களது யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். உலகத் திரைப்படங்களின் பின்னணி, கதை, அதன் பாதிப்பு ஆகியவற்றைப் பேசி உடனுக்குடன் வீடியோவாக வெளியிடுவது இவர்களின் ஸ்பெஷல்.

யூ-ட்யூப் சேனல்

கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில், தினமும் நான்கு அல்லது ஐந்து படங்களை முழுமையாகப் பார்த்து, அந்தப் படங்களைப் பற்றிய விமர்சனங்களையும், படத்தின் மீதான தங்கள் பார்வைகளையும் ஒவ்வொரு படத்தின் திரையிடலுக்குப் பின்பும் வீடியோவாகப் பதிவு செய்து யூ-ட்யூபில் பகிர்ந்து வருகிறார்கள்.

சிறந்த படங்களின் விமர்சனம்

உலக சினிமா பிரியர்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களை மிஸ் செய்திருந்தால் இந்த யூ-ட்யூப் சேனலில் சென்று அந்தப் படங்களைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றைப் பார்க்க முயற்சிக்கலாம். விருதுகளைக் குவித்த படங்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். ரசிகர்கள் பலரும் இந்த சேனலின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

Fistful of movies

'Fistful of movies' எனும் சினிமா பற்றிய யூ-ட்யூப் சேனலை பாலா ரா கணேஷ், பிரசாத் மனோ, யூஜென் பிரசாந்த், ராஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். நால்வருமே சினிமாவின் மீது பெரும் தாகம் கொண்டவர்கள். தமிழில் மாற்று சினிமா உருவாகக் காத்திருப்பவர்கள். தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நல்ல சினிமாவை உணருமளவுக்கு உயர்த்தவேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம்.

சினிமா தகவல்கள்

திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, இந்த யூ-ட்யூப் சேனலில் சினிமா தகவல்களையும், உலக சினிமா விமர்சனங்களையும் புதுமையான முறையில் வழங்கும் திட்டம் வைத்திருக்கிறார்களாம். சினிமா ஆர்வலர்கள், உலக சினிமா ரசிகர்கள் விருப்பமிருந்தால் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X