போட்டியாளர்கள் அறிமுகம் நேத்தே முடிஞ்சாச்சு.. இவர்கள்தான் பிக்பாஸின் ஃபைனல் கன்டெஸ்டென்ட்டா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் நேற்றே முடிந்த நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Promo | Gossip, Highlights, Trolls

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் இன்று மாலை தொடங்குகிறது.

இதற்கான புரமோ நிகழ்ச்சிகள் களைக்கட்டிய நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது.

பிரபலங்கள் மறுப்பு

பிரபலங்கள் மறுப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கிய போதில் இருந்தே போட்டியாளர்கள் இவர்கள்தான் என சில லிஸ்ட் வைரலானது. ஆனால் அதில் இடம் பெற்ற போட்டியாளர்கள் நான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என்று பளீச்சென கூறிவிட்டனர்.

பங்கேற்க போவதில்லை

பங்கேற்க போவதில்லை

குறிப்பாக நடிகை சுனைனா நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் என் படங்களை யார் முடித்துக் கொடுப்பார்கள் என்று கேட்டு தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

அவரை தொடர்ந்து நடிகை அம்ரிதா அய்யரும் தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என்று கூறினார். நடிகை லக்ஷ்மி மேனன், என்னால் யார் வீட்டு டாய்லெட்டையும் கழுவ முடியாது என்றும் யாருடைய எச்சில் தட்டையும் கழுவ முடியாது என்றும் அதிரடியாக கூறினார்.

நடிகை காயத்ரி

நடிகை காயத்ரி

இதனால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான அவர், பின்னர் தன்னுடைய கருத்து குறித்து விளக்கம் கொடுத்தார். அவரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை காயத்ரி பிக்பாஸில் பங்கேற்பார் என கூறப்பட்டது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

ஆனால் அவரும் இதனை மறுத்து விட்டார். நானும் உங்களை போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை வீட்டில் இருந்தப்படி பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே தான் பார்க்க போகிறேன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

அறிமுக நிகழ்ச்சி

அறிமுக நிகழ்ச்சி

இதனால் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலையே நடந்து முடிந்தது.

வெளியான தகவல்

வெளியான தகவல்

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ரேகா, ஆர், பாடகர் வேல்முருகன், கேப்ரில்லா, ராம், சூப்பர் சிங்கர் அஜித், அனுமோகன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை அறிவிப்பு

இன்று மாலை அறிவிப்பு

மேலும் விஜே அர்ச்சனா பங்கேற்பதில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப் பூர்வ தகவல் இன்று மாலை நிகழ்ச்சி தொடங்கிய பிறகே வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X