தனுஷின் டி43 படம்... இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலையில ஆரம்பிக்குதாம்... விரைவில் ரிலீஸ்

சென்னை : தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

டி43 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலையில் துவங்கவுள்ளதாக படத்தை தயாரித்துவரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

தற்போது தான் நடித்துவரும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுவரும் தனுஷ் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தனுஷின் அடுத்தபடம் தங்களை சிறப்பான வகையில் எண்டர்டெயின் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

விரைவில் நாடு திரும்பும் தனுஷ்

விரைவில் நாடு திரும்பும் தனுஷ்

தற்போது தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவரும் தனுஷ் அதற்காக அமெரிக்காவில் உள்ளார். ஆன்டனி மற்றும் ஜோ ரூசோ என்ற இரண்டு டைரக்டர்கள் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து தனுஷ் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு

இந்நிலையில் அவருக்காக டி43 படக்குழு காத்திருக்கிறது. இதனிடையே வரும் ஜூலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படத்தை தயாரித்துவரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

படத்தில் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார் மாளவிகா மோகனன். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். படத்தில் மேலும் மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிரிதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் அடுத்தமாதம் நிறைவடையும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X