எஸ்ஜே சூர்யாவின் கில்லர்… ஜெர்மனியில் இருந்து வந்த BMW கார்… இப்பவே திரில்லிங் ஸ்டார்ட் ஆகிடுச்சே
சென்னை: வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா, தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
மீண்டும் படம் இயக்கவுள்ள எஸ்ஜே சூர்யா அதற்கான வேலைகளில் பிசியாகி விட்டார்.
கில்லர் என்ற தலைப்பில் உருவாகும் எஸ்ஜே சூர்யாவின் புதிய படம் கார் ரேஸை பின்னணியாக வைத்து தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநராக எஸ்ஜே சூர்யா
1999ல் அஜித், சிம்ரன், ஜோதிகா ஆகியோர் நடித்த 'வாலி' திரைப்படம் மூலம் இயக்குநரானார் எஸ்ஜே சூர்யா. செம்ம மிரட்டலான ரொமாண்டிக்கல் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான வாலி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தை இயக்கி இன்னொரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்து எஸ்ஜே சூர்யா இயக்கிய நியூ படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்து இன்னும் வெரைட்டி காட்டினார். கதை, திரைக்கதை, மேக்கிங் என எல்லாவற்றிலும் எஸ்ஜே சூர்யாவின் ஸ்டைலே வேறு ரகமாக இருந்தது. இதனால், அவரின் படங்களுக்கு எப்போதுமே மாஸ் தான்.

நடிகராக அவதாரம்
நடிகராக வேண்டும் என்ற கனவோடு திரையுலகிற்கு வந்த எஸ்ஜே சூர்யாவுக்கு, ஆரம்பத்தில் அதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், தான் இயக்கிய படங்கள் மூலம் ஹீரோவாக நடித்த எஸ்ஜே சூர்யா, அடுத்தடுத்து ஷங்கர் இயக்கிய 'நண்பன்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' ஆகிய படங்களில் நடித்து கம்பேக் கொடுத்தார். அதன்பின்னர் கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கமும் பிஸியான நடிகராக வலம் வரும் இப்போது விஜய்யுடன் வாரிசு, ஷங்கர் இயக்கத்தில் RC 15 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

எஸ்ஜே சூர்யாவின் கில்லர்
என்னதான் பிஸியான நடிகராக இருந்தாலும், இயக்குநர் ஆசை மட்டும் எஸ்ஜே சூர்யாவை விடவே இல்லை. அதனால் மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டராம் எஸ்ஜே சூர்யா. அவரது இயக்கத்தில் கடைசியாக 'இசை' திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அவர் இயக்கும் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எஸ்ஜே சூர்யாவின் புதிய படத்திற்கு கில்லர் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கதை, திரைக்கதை வேலைகளை எஸ்ஜே சூர்யா முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஜெர்மனியில் இருந்து வந்த BMW
'கில்லர்' திரைப்படம் கார் ரேஸை பின்னனியாக வைத்து உருவாகவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ஜெர்மனியில் இருந்து செம்ம சூப்பரான BMW காரை இறக்குமதி செய்துள்ளார் எஸ்ஜே சூர்யா. இருவர் மட்டுமே பயணிக்க கூடிய BMW Z4 M40i ரெட் கலர் கார் எஸ்ஜே சூர்யாவிடம் வந்து சேர்ந்துள்ளது. ரொம்பவே ஸ்டைலிஷான இந்த BMW Z4 M40i வேரியண்ட் காருக்கு கில்லர் படத்தில் முக்கியமான ரோல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு கோடி மதிப்புடைய BMW Z4 M40i காரை, கில்லர் படத்திற்காக எஸ்ஜே சூர்யா சொந்தமாகவே வாங்கியுள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக எகிறிப்போய் இருக்கிறது.


Click it and Unblock the Notifications