தியேட்டர்கள்ல ரிலீசாகும் த்ரிஷ்யம் 2... ஆனா இங்க இல்லீங்க... மோகன்லால் அப்டேட்
சென்னை : நடிகர் மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியானது.
இந்நிலையில் இந்த படம் தற்போது தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக ஒரு ட்விஸ்ட்டுன் நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் போராட்டம்
மலையாளத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகமாக ஜீத்து ஜோசப் இயக்கத்திலேயே வெளியான படம் த்ரிஷ்யம் 2. செய்த குற்றத்தை மறைக்க போராடும் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்த படம் கதைக்கருவாக கொண்டுள்ளது.

சிறப்பான திரைக்கதை
கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியிடப்பட்டது. முதல் பாகத்திற்கு சற்றும் சளைக்காத திரைக்கதையை இந்த படத்திலும் உருவாக்கியிருந்தார் இயக்குநர். பாத்திரப்படைப்புகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மோகன்லால் அப்டேட்
முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரேயொரு இழையை உருவாக்கி அதிலிருந்து முழுக் கதையையும் வடிவமைத்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இந்நிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி தெரிவித்த மோகன்லால்
ஆனால் இந்தியாவில் இல்லாமல் யூஏஇ, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். இறுதியாக தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், நாளை ரிலீசாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் தியேட்டர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











