twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாந்தான்டா ஜெயிச்சேன்! - கமலிடம் கே பாலச்சந்தர்

    By Shankar
    |

    சென்னை: நினைத்தாலே இனிக்கும் படத்தைப் பார்த்து முடித்ததும் படம் குறித்து நல்லாருக்கு என்றும் சொல்லவில்லை, நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை கமல். பெரும் வெற்றிப் பெற்ற இந்தப் படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியாகிறது. நாந்தான்டா ஜெயிச்சேன், என்று கமலைப் பார்த்துக் கூறினார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

    ரஜினி, கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் டிஜிட்டல் பதிப்பு ட்ரைலர் வெளியீட்டின்போது பேசிய பாலச்சந்தர், "கொஞ்சம் சீரியசான படங்களிலிருந்து விலகி, ரிலாக்ஸாக எவ்வித டென்ஷனும் இல்லாமல் படம் எடுக்க வேண்டுமென்று இந்த படத்தை எடுத்தோம்.

    ஜாலியாக படம் எடுக்க சிங்கப்பூர் சென்று அங்கு கஷ்டப்பட்டாலும், இந்த திரைப்படத்தைப் பார்த்த போது மனதிற்கு திருப்தியாக இருந்தது.

    இப்போது இந்த பிரம்மாண்ட ஸ்கிரீனில் 34 வருடம் கழித்து மறுபடியும் பார்க்கும் போது இந்த படத்தை நான் தான் எடுத்தேனா என்று தோன்றுகிறது.

    நாந்தாண்டா ஜெயிச்சேன்

    நாந்தாண்டா ஜெயிச்சேன்

    இந்த படம் எடுத்ததும் நானும் கமலும் தான் தனியாக பார்த்தோம். கமலிடம் ஒருவர் 'படம் எப்படி இருக்கிறது?' எனக் கேட்டபோது படத்தில் ஜெயப்பிரதா செய்வது மாதிரி ஆமா இல்லை என இருபக்கமும் தலையாட்டினார். அதன்பிறகு நான் அவருடன் பேசவே இல்லை.

    அப்போதே மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படம் 34 வருடங்கள் கழித்து ரிலீஸாகிறது. கமல் பாத்தியா... நான்தான்டா ஜெயிச்சேன்.

    கமலை நான் அறிமுகப்படுத்தியிருக்கலாம். நான் வளர்த்துவிட்டிருந்தாலும், கமலால் ஒரு காலக்கட்டத்தில் நான் வளர்ந்திருக்கிறேன்," என்றார்.

    கமல் பதில்

    கமல் பதில்

    இதற்கு பதலிளிக்கும் வகையில் பேசிய கமல், "கே.பாலச்சந்தர் ஐயா டைரக்ட் செய்யும் போதும் எம்.எஸ்.வி ஐயா இசையமைக்கும் போதும் அருகிலிருந்து பார்ப்பேன். அந்த அனுபவம் தான் இன்று நான் இயக்குனராக உதவியது.

    முன்பே இயக்குநராகியிருந்தால் பஸ்ஸில்தான் வந்திருப்பேன்

    முன்பே இயக்குநராகியிருந்தால் பஸ்ஸில்தான் வந்திருப்பேன்

    அப்போதே நான் இயக்குனராக விரும்பியதை கே.பாலச்சந்தர் ஐயா தடுத்தார். அவர் தடுத்திருக்காவிட்டால் நான் அப்போதே ஒரு இயக்குனராகி இன்று பஸ்ஸில் தான் இங்கு வந்திருப்பேன்.

    ரெண்டுபேர் ஜெயிச்சாலும் ஒண்ணுதான்...

    ரெண்டுபேர் ஜெயிச்சாலும் ஒண்ணுதான்...

    நான் தான் ஜெயிச்சேன் என சொன்னார் பாலச்சந்தர் ஐயா. நீங்க ஜெயிச்சாலும் நான் ஜெயிச்சாலும் ஒண்ணு தான் ஐயா" என்று கூறினார்.

    English summary
    K Balachander says that Kamal Hassan has not satisfied with the out come of Ninaithale Inikkum in those days. 'See Kamal, finally I won', the veteran film maker said in the trailer release function of Ninaithale Inikkum.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X