இது லிங்கா செய்த மாயம்... 7 மாதம் கழித்து ட்விட்டர் பக்கம் வந்த ரஜினி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மாதங்கள் கழித்து ட்விட்டர் பக்கம் வந்துள்ளார்.
தற்போது அரசியல், சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு துவங்கி ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் தங்களின் நடவடிக்கை குறித்து அவர்களே தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான் கோச்சடையான் ரிலீஸையொட்டி ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்தார்.
அடேங்கப்பா அவர் ட்விட்டரில் சேர்ந்த அந்த நாளை தான் மறக்க முடியுமா?

சும்மா அதிர்ந்ததுல்ல
ரஜினி ட்விட்டரில் சேர்ந்த தினம் மீடியாக்கள் அதை தான் முக்கிய செய்தியாக வெளியிட்டன. அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது. அதன் பிறகு அடங்கிவிட்டது.

புஸ்
மே 22ம் தேதி கோச்சடையான் படக்குழுவை வாழ்த்தி ட்வீட் போட்ட ரஜினி அதன் பிறகு ட்விட்டர் பக்கமே வரவில்லை.

லிங்கா
லிங்கா பட ரிலீஸையொட்டியாவது அவர் ஏதாவது ட்வீட் போடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தினம் தினம்
ரஜினி இன்றைக்கு ஏதாவது ட்வீட் போட்டுள்ளாரா என்பதை பார்க்கவே அவரது ரசிகர்கள் தினம் தினம் ட்விட்டர் பக்கம் சென்றனர்.

பிறந்தநாள்
ரஜினிகாந்த் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், நண்பர்கள், திரை உலகினர், கமல்ஹாஸன், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து டிசம்பர் 12ம் தேதி ட்வீட் செய்துள்ளார்.

மறுபிரவேசம்
கோச்சடையான் ரிலீஸாகும் நேரத்தில் ட்விட்டரில் கணக்கு துவங்கி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி லிங்கா ரிலீஸான அன்று தான் மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











