சல்மான் கானுக்கு விரைவில் திருமணம்: ஆனால் காதலி லூலியாவுக்காக அல்ல, மாறாக...
மும்பை: ஒரு வழியாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்.
பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுக்கு 50 வயதாகிவிட்டது. அவரது தம்பி, தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஆனால் சல்மான் மட்டும் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.
சல்மான் கான் வாழ்வில் பல காதலிகள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால் யாரும் தங்கவில்லை.

லூலியா வந்தூர்
சல்மான் கான் தற்போது ரோமானியாவை சேர்ந்த நடிகை லூலியா வந்தூரை காதலித்து வருகிறார். இடையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சேர்ந்துவிட்டனர்.

திருமணம்
எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெறுவது குறித்து பார்க்க வேண்டும் என்று சல்மான் தெரிவித்திருந்தார்.

குடும்பத்தார்
சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தார் கெஞ்சினர். ஆனால் சல்மான் கண்டுகொள்ளவே இல்லை. சொல்லி சொல்லி கடுப்பாகிப் போன அவர்கள் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று சல்மானுக்கு கட்டளையிட்டுள்ளனர்.

ஒரு வழியாக
குடும்பத்தாரின் கட்டளையை சல்மான் கான் காற்றில் பறக்கவிட்டார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாத அவரது தாய் சல்மா கானுக்கு தனது மகன் திருமணத்தை பார்க்கும் ஆசை வந்துள்ளது. உடல்நலம் சரியில்லாத தனது தாய்க்காக சல்மான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











