ஒரு வழியா விளையாடிய செல்லக்குட்டி ஷிவானி.. அதுவும் பாத்ரூம் ஏரியாவுல யார் கூடத் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே, யாருடனும் மிங்கிள் ஆக மாட்றாங்க ஷிவானி என ஏகப்பட்ட பேர் அவருக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தாங்க..

16ம் நாள் எபிசோடில் கூட அழகான ராட்சசியாக டிரெஸ் போட்டுக் கிட்டு ஷிவானி ரேம்ப் வாக் தான் பண்ணாங்க..

இந்நிலையில், 17வது நாள் எபிசோடில் தான் ஒரு வழியா செல்லக்குட்டி ஷிவானி விளையாட ஆரம்பித்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ரேம்ப்வாக் பண்ண ராட்சசி

ரேம்ப்வாக் பண்ண ராட்சசி

அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என்கிற பட்டம் கொடுத்து, சுவாரஸ்யமே இல்லாத போட்டியாளர் என ஜெயிலில் பிடித்து போட்ட பிறகும் கூட ஷிவானி நாராயணன் விளையாட்ட ஆரம்பிக்கவே இல்லை. நேற்று ராட்சசி கெட்டப்பை போட்ட நிலையிலும், அழகான ராட்சசியாகவே ரேம்ப்வாக் பண்ணிட்டு இருந்ததை ரசிகர்கள் கிண்டல் அடித்தனர்.

மயக்கும் தேவசேனா

மயக்கும் தேவசேனா

ராட்சசியாக இருந்தே ஒண்ணும் பண்ணலை தேவசேனா கெட்டப்பில் இன்னைக்கும் மிக்சர் தான் ஷிவானி சாப்பிடப் போகிறார் என நினைத்த ரசிகர்களுக்கு, குனிந்து, நிமிர்ந்து தனது முன்னழகை காட்டி மயக்கும் தேவசேனாவாக ஆரம்பத்திலேயே ரசிகர்களை சொக்கிப் போக செய்தார் ஷிவானி.

பாலாஜியுடன் விளையாட்டு

பாலாஜியுடன் விளையாட்டு

கேமே ஆட மாட்டேங்குறாரே ஷிவானி என நினைத்த நிலையில், ஒரு சில குரல்களை கண்ணாடி வழியாக எதிர்த்து கொடுத்த ஷிவானி, பாத்ரூம் ஏரியாவில், பாலாஜி உடன் ஸ்பிரே அடித்து விளையாடிக் கொண்டிருந்த அழகை பிக் பாஸ் ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர். நீ எது பண்ணாலும் அழகா இருக்குமா அடிக்கடி கேமராவில் தெரியுற மாதிரி ஏதாவது பண்ணுமா என்றனர்.

பொறுக்க முடியாத சனம்

பொறுக்க முடியாத சனம்

அந்த இடத்துக்கு வந்த சனம் ஷெட்டி, பாலாஜி எப்படி ஜாலியா ஷிவானி கூட ஜல்சா பண்ணலாம் என நினைத்து, அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை மூட்டி விடுவது போல பேச, ஷிவானி சனம் ஷெட்டி என்றும் பாராமல் அவரை வெளுத்து வாங்கினார். எதையுமே எடுக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் சொல்லல என சனம் சொல்ல, ஃபேர் கேம் ஆடுங்க என ஷிவானி பொட்டில் அடித்தது போல சொன்னார்.

ஓடிப்புடிச்சு விளையாடிய ஷிவானி

ஓடிப்புடிச்சு விளையாடிய ஷிவானி

ஷிவானி, கேபி என பிக் பாஸ் வீட்டின் இரண்டு இளம் பெண்களுடனும் ஹாட் பாயான பாலா ஓடிப்புடிச்சு விளையாட ஆரம்பித்து விட்டார். பாலவை பிடித்து வெளியே தள்ளிய நிலையில், மீண்டும் கிச்சன் ஏரியாவுக்கு சென்று மிளகாய் பொடியை எடுத்த பாலாவை ஷிவானி ஓடிப் பிடித்தது எல்லாம் பார்க்கவே பொறாமையாக இருந்தது.

மிளகாய் பொடியை கொட்டியாச்சு

மிளகாய் பொடியை கொட்டியாச்சு

விளையாட்டு விபரீதம் ஆகிடுச்சு, பாலா, ஷிவானி, சோம்ஸ் என ஓடிபிடித்து மிளகாய் பொடியை கேட்ச் அண்ட் கேட்ச் விளையாடி கடைசியில், ஜல்லிக்கட்டு மாடு சிலை அருகே அதை போட்டு உடைச்சிட்டாங்க, அங்க வந்த அர்ச்சனா அக்கா ஷிவானியை ஹாஃப் செய்ய, வெளிய இருந்த ஆரி, இதுவும் உங்க திட்டம் தானே, கேவலமா மிளகாய் பொடியை எல்லாம் வைத்து விளையாடணும்னு என வெளுத்து விட்டார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Promo 1• Day 17
அனிதாவுக்கும் சோம்ஸுக்கும் சண்டை

அனிதாவுக்கும் சோம்ஸுக்கும் சண்டை

மிளகாய் பொடியை கொட்டியவுடன் அதனை சோம்ஸ் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த நிலையில், அனிதா சம்பத் அங்கே வந்து அவரை காச் மூச் என கத்திய நிலையில், எப்பவுமே உன் பேச்சை கேக்கணும்னு அவசியம் இல்லை.. நானே க்ளீன் பண்றேன் போ என கத்த ஆரம்பித்துவிட்டார். எல்லாத்தையும் சுத்தம் பண்ண பிறகு, அர்ச்சனா, நானே க்ளீன் பண்றேன் என சோம்ஸை அனுப்பிவிட்டு, ஆஜீத்தை பெருக்க விட்டார். பாலாஜியும், ஷிவானியும் விளையாடுன விளையாட்டுல சோம்ஸ் மாட்டுனது தான் மிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X