கதம் கதம்: ஆளுக்கொரு வழியில் செல்லும் சிவா, அஜித்
Recommended Video

சென்னை: அப்பாடி ஒரு வழியாக அஜித்தும், சிவாவும் ஆளுக்கு ஒரு வழியில் செல்ல உள்ளனர்.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று அஜித்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் சிவா. சிவா, நீங்கள் நல்லா இருப்பீங்க எங்க தலயை விட்டுவிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கெஞ்சும் நிலையாகிவிட்டது.
உண்மையை சொல்ல வேண்டுமானால் விவேகம் படத்தை பார்த்து தல ரசிகர்களுக்கே லைட்டா கண்ணை கட்டிவிட்டது. அதனால் தான் அஜித் சிவாவை கைவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் ரசிகர்கள்.

அஜித்
தல ரசிகர்களின் வேண்டுதல் வீண் போகவில்லை. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவில்லை என்ற நல்ல தகவல் வெளியானது. அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் என்று வினோத் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது.

விஷ்ணுவர்தன்
அஜித் வினோத் அல்ல மாறாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. வினோத் விக்ரமை இயக்க தயாராகி வருவதாகவும் அதன் பிறகே அஜித்தை இயக்குகிறார் என்றும் பேச்சு கிளம்பியது. அடங்கப்பா, அஜித்தை இயக்குவது வினோத்தா, விஷ்ணுவர்தனா என்று ஒரு முடிவை சொல்லுங்கப்பா என்று ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.

இயக்கம்
அஜித்தை இயக்க விஷ்ணுவர்தனும் ஆவலாக உள்ள நிலையில் இந்த செய்தி வெளியானது. இந்நிலையில் இது குறித்து விசாரித்ததில் அஜித்தின் 59வது படம் அதாவது விஸ்வாசத்திற்கு அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் அல்ல வினோத் தான் இயக்குகிறார் என்பது தெரிய வந்தது. ஆக, வினோத்திடம் இருந்து ஒரு கிளாஸ், மாஸான படத்தை எதிர்பார்க்கலாம்.

சிவா
விஸ்வாசம் படத்தை அடுத்து சிவா அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்கிறாராம். சிவா, அல்லு அர்ஜுன் இணையும் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம். தற்போது விஸ்வாசம் படத்தில் அஜித்தும், சிவாவும் பிசியாக உள்ளனர். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











