என்ன நடந்தாலும் அசரவே மாட்றாரே.. நேத்து அங்க ஆஜர்.. இன்னைக்கு இங்க.. கெத்து காட்டும் அன்புச்செழியன்!
Recommended Video
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் பூஜையில் பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பைனான்சியர் அன்புச்செழியன்.. ஆண்டுக்கு ஒரு முறை அவரது பெயர் செய்திகளில் எப்படியாவது அடிபட்டுவிடுகிறது. கோபுரம் பைனான்ஸ் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அன்புச் செழியன், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் வழங்கி வருகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அவர்தான் பைனான்ஸ் வழங்கியுள்ளார். அது தவிர படங்களையும் தயாரித்து வருகிறார் அன்புச்செழியன்.

பெரும் புள்ளிகள்
கடந்த 2017ஆம் ஆண்டு இவரிடம் கடன் பெற்ற நடிகர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், இவராலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி தேடப்பட்டு வந்தார் அன்புக்செழியன். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் பல அரசியல் புள்ளிகளுக்கும் நெருக்கம்.

தப்பாத அன்புச்செழியன்
அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். அப்போது பிகில் படம் சம்பந்தமாக சிக்கிய சில ஆவணங்களால் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அன்புச்செழியனின் அலுவலகம், வீடு, மதுரையில் உள்ள வீடு, அவரது நண்பரின் வீடு என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ரூ.77 கோடி பறிமுதல்
இதில் அன்புச்செழியன், கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருந்த ரூ.77 கோடி ரொக்கம், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணை
இதனை தொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று காலை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.77 கோடி, சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பூஜையில் கெத்து
வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அன்புச்செழியன் பதில் அளித்து அதுதொடர்பான ஆவணங்களை காண்பித்துள்ளார். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பிரச்சனைகள் எல்லாம் ஓய்வதற்குள் இன்று மாநாடு படத்தின் பூஜையில் கெத்தாய் பங்கேற்றியிருக்கிறார் அன்புச்செழியன்.
மாலை மரியாதை
கறுப்பு பேன்ட், நீல நிற சட்டையில் ஃபார்மலாக பங்கேறுள்ளார். அவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர் படக்குழுவினர். இதன் மூலம் சிம்பு நடிக்கும் மாநாடு படத்திற்கும் அவர்தான் பைனான்ஸ் செய்ய உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











