மாவீரன் படத்தில் இருந்து விலகிய முக்கியமான பிரபலம்..? சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சிக்கல்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வந்தது.

அதேநேரம் சிவகார்த்திகேயன் - இயக்குநர் மடோன் அஸ்வின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இது தவறான தகவல் எனவும், மாவீரன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாகவும் படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவீரனில் இருந்து முக்கியமான பிரபலம் ஒருவர் விலகியதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருமொழிகளில் மாவீரன்

இருமொழிகளில் மாவீரன்

குறுகிய காலத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், டாக்டர், டான் படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வெளியான பிரின்ஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மண்டேலா படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்து வருகின்றனர்.

தொடரும் சர்ச்சை

தொடரும் சர்ச்சை

மாவீரன் திரைப்படம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயனுக்கு கதையில் திருப்தி இல்லை என்றும், அதனால் அவருக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை அடியோடு மறுத்த மாவீரன் டீம், விரைவில் படம் வெளியாகும் என அறிவித்தது. மேலும், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவீரன் டீம் பொங்கல் கொண்டாடிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

முக்கியமான பிரபலம் விலகல்

முக்கியமான பிரபலம் விலகல்

அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஏற்கனவே ஷூட் செய்யப்பட்டதில் சில காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என மீண்டும் சர்ச்சை வெடித்தது. சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு, சில காட்சிகளை ரீ-ஷூட் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது மாவீரன் படத்துக்கு பைனான்ஸ் செய்துவந்த அன்புச் செழியன் விலகியதாக சொல்லப்படுகிறது.

கைமாறுகிறதா மாவீரன்?

கைமாறுகிறதா மாவீரன்?

மாவீரன் படத்தின் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்ய உள்ளதால் ஷூட்டிங் முடிய அதிக நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பைனான்ஸ் கொடுத்து வந்த அன்புச் செழியன் மாவீரன் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேறொரு நிறுவனம் மாவீரன் படத்துக்கு பைனான்ஸ் செய்யவுள்ளதாம். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை அன்புச் செழியன் தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் வெளியிட்டார். இந்தப் படமும் எதிர்பார்த்த லாபம் கொடுக்காத நிலையில், தற்போது மாவீரன் படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக வெளியான தகவல் சிவகார்த்திகேயனுக்கு மேலும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X