Bigil அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிங்க அட்லி: விஜய் ரசிகர்கள் கோரிக்கை
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் வரும் சிங்கப் பெண்ணே பாடல் ஆன்லைனில் கசிந்துள்ளபோதிலும் அதை விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டுபிடிக்கத் துடிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பிகில். அந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. பிகில் படத்தில் விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அப்பா ஒரு தாதாவாம், மகன் விஜய் தான் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராம்.
இந்நிலையில் பிகில் பட பாடல் ஒன்று ஆன்லைனில் கசிந்துவிட்டது.(கசியவிடப்பட்டுள்ளது?)

சிங்கப்பெண்ணே
பிகில் படத்திற்காக விவேக் எழுதிய சிங்கப் பெண்ணே பாடல் கசிந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அந்த பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளும், ரஹ்மானின் இசையும் நன்றாக உள்ளது. இந்த பாடல் கசிவால் படக்குழு மட்டும் அல்ல விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுபிடியுங்கள் அட்லி என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருத்தம்
பிகில் பட பாடல் கசிந்துள்ள நிலையில் வருத்தம் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. #Bigil #Singapenne

படக்குழு
அட்லி எதுவும் கசிந்துவிடாமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பாடல் கசிந்துள்ளது என்றால் இது வெளியாட்கள் வேலையாக இருக்காது படக்குழுவை சேர்ந்த யாரோ வேண்டும் என்றே கசியவிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. பாடல் கசிந்தாலும் நன்றாக இருக்கிறது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடல் போன்று சிங்கப் பெண்ணேவும் பெரிய அளவில் ஹிட்டாகும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ரஹ்மான்
பாடல் கசிந்துவிட்டதே என்று இடிந்து போய்விடாமல் அதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். அந்த பாடலையும், ரஹ்மானின் திறமையையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தர்பார் படத்தை போன்று பிகில் படத்திற்கும் கசிவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











