அது இன்னா வீடுன்னா.. பொண்ணு வீடுமா.. அப்டீன்னா அது இன்னா கதை!
Recommended Video
சென்னை: இது செம கதை பாஸ்.. மெஸ்மரைசிங் கதை.. செம திரில்லான கதையும் கூட.
ஒரு ஊர்ல ஒரு ராணுவ வீரன். லீவுக்காக ரயிலில் ஊருக்கு வருகிறான். ஊரில் வந்து இறங்கிய அவனை குடும்பமே சேர்ந்து ஒரு வீட்டுக்கு இட்னு போகிறார்கள். அது இன்னா வீடுன்னா.. பொண்ணு வீடு. அதாவது பொண்ணு பார்க்கக் கூட்டிட்டு போறாங்க.

மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலை.. கபால்னு பூந்து வெளியே வந்துடறாங்க. கரிச்சுக் கொட்டுது குடும்பமே.. ஆனா இன்னா அதிசயம் பாருங்க.. அதே பொண்ணை அதே மாப்பிள்ளை வெளியில் பார்க்கும்போது கப்புன்னு பிடிச்சுப் போகுது. ரெண்டும் லவ் பண்ண ஆரம்பிக்குதுங்க.
அப்ப ஒரு திருடனைப் பார்க்கிறார் நம்ம ஹீரோ. பஸ்சில் வந்தபோது அவனைப் பார்க்கிறார். திடீரென பஸ்சில் வெடிகுண்டு வெடிக்குது. வச்சவன் அந்த திருடன்தான்.. அவன் ஒரு தீவிரவாதி. கண்டுபிடிச்சு போலீஸிடம் கொடுக்கிறார். பின்னர் அவனைக் கடத்திக் கொண்டு வர்றார். தன் வீட்டில் அடைத்து வைக்கிறார். தீவிரவாதிகளின் நெட்வொர்க்கைக் கண்டுபிடிக்கிறார். இதையெல்லாம் தன்னோட ராணுவ நண்பர்களோடு சேர்ந்து செய்கிறார்.
அலோ அலோ.. இது எங்கேயோ கேட்ட மாதிரி கீதே.. அப்படீன்னு உங்களுக்கு தோணுதா.. தோணனும் பாஸ்.. அப்படீன்னா இது இன்னா கதை.. இன்னா படம்னு கமெண்ட்ல வந்து போட்டுட்டு போங்க பார்ப்போம். வர்ட்டா!


Click it and Unblock the Notifications











