twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியா, குவைத், கத்தாரில்… விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்‘ படத்திற்கு தடை.. என்ன காரணம்?

    |

    சென்னை : விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தாரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    எஃப்.ஐ.ஆர் திரைப்படம் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இப்படத்தில் அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

    வெளிநாடுகளிலும் புக்கிங் தாறுமாறு.. எஃப்ஐஆர் படக்குழு மகிழ்ச்சி!வெளிநாடுகளிலும் புக்கிங் தாறுமாறு.. எஃப்ஐஆர் படக்குழு மகிழ்ச்சி!

    எஃப்.ஐ.ஆர்

    எஃப்.ஐ.ஆர்

    கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் எஃப்.ஐ.ஆர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து உள்ளனர். இவர்களுடன் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

    விஷ்ணு விஷால்

    விஷ்ணு விஷால்

    அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் படத்துக்குப் பிறகு வெளியான காடன், சிலுக்குவார் பட்டி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளன. எஃப்.ஐ.ஆர் இத்திரைப்படம் விஷ்ணுவிஷாலின் சினிமா கேரியலில் ஒரு நல்லத் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிம்பு பாடிய யாரிவன் யாரிவன் என்ற தீம் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தடை

    எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தடை

    எஃப்.ஐ.ஆர் திரைப்படம் நாளை பிப்ரவரி 11ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள, நிலையில், இத்திரைப்படத்திற்கு மலேஷியா, குவைத், கதார் போன்ற நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    இப்படத்தின் கதைக்களம் தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் அதிகம் பேசி உள்ளதால் குவைத், மலேசியா, கத்தாரில் இப்படத்திற்கு தடைவிதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய இளைஞராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

    English summary
    Vishnuvishal’s FIR banned in Malaysia Kuwait and Qata,எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தாரில் தடை
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X