மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க விடாத நடிகர் மீது வழக்குப்பதிவு

By Siva

லாகூர்:மகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட மறுத்ததற்காக நடிகர் ஃபவாத் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகர் ஃபவாத் கான். பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். பாகிஸ்தான் சுகாதாரத் துறை ஆட்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்துள்ளனர்.

FIR filed against Fawad Khan

லாகூரில் உள்ள ஃபவாத் கான் வீட்டிற்கு சென்றபோது மகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அவரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளர். மேலும் ஃபவாதின் கார் டிரைவரும் போலியோ மருந்து கொடுக்க வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதையடுத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தற்காக ஃபவாத் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்தபோது ஃபவாத் கான் நாட்டிலேயே இல்லை. இருப்பினும் குடும்பத் தலைவர் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளுக்கு இங்கிலாந்தில் தான் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் ஃபவாதின் மனைவி. இது குறித்து லாகூர் துணை கமிஷனர் கூறியிருப்பதாவது,

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்ற குழுவிடம் ஃபவாதின் டிரைவர் மற்றும் குடும்பத்தார் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். ஃபவாத் எங்களின் பெருமைக்குரியவர். குழந்தைக்கு மருந்து கொடுக்க அவர் அனுமதிக்க வேண்டும். லாகூரில் கடந்த வாரம் ஒரு குழந்தைக்கு போலியா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் உடனடியாக குழந்தைக்கு மருந்து கொடுக்க ஃபவாத் அனுமதிக்க வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X