ஊ சொல்றியா நடன இயக்குநர்மீது பாலியல் புகார்... 2 ஆண்டுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு!

மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநராக உள்ளார் கணேஷ் ஆச்சார்யா. குண்டாக இருந்தாலும் இவரது நடன அசைவுகள் அனாயாசமாக இருக்கும். இந்திய அளவில் முக்கியமான பல படங்களில் இவர் நடனம் அமைத்துள்ளார்.

முன்னணி நடன இயக்குநர்

முன்னணி நடன இயக்குநர்

பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் கணேஷ் ஆச்சார்யா. பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநராக இவர் இருக்கிறார். குண்டாக இருந்தாலும் இவரது நடன அசைவுகள் அநாயாசமாக இருக்கும்.

ஊ சொல்றியா நடன இயக்குநர்

ஊ சொல்றியா நடன இயக்குநர்

சமீபத்தில் அல்லு அர்ஜூன், சமந்தா இணைந்து நடனமாடி இந்திய அளவில் கவனத்தை பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2020ல் இவர்மீது உடன் பணிபுரிந்த டான்சர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தற்போது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

டான்சர் பாலியல் புகார்

டான்சர் பாலியல் புகார்

தன்னிடம் கணேஷ் ஆச்சார்யா பாலியல் அத்துமீறியதாகவும் வற்புறுத்தி ஃபோர்ன் படங்களை பார்க்க வைத்ததாகவும் அந்த டான்சர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் புகாரை அவர் மறுத்த நிலையில் தற்போது எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை.

ஆதரவு கருத்து

ஆதரவு கருத்து

கணேஷ் ஆச்சார்யா மீது அந்த டான்சர் புகார் அளித்தபோது அவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகை தனுஸ்ரீ தத்தாவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரையடுத்து கடந்த 2020ல் இந்தியன் பிலிம் அண்ட் டெலிவிஷன் கோரியோகிராபர் அசோஷியேஷனில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

அப்போது அவர் இந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கணேஷ் ஆச்சார்யா மீது தற்போது புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X