என்னை ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்தார்.. நடிகையின் கணவர் மீது பெண் பகிர் குற்றச்சாட்டு!

மும்பை : திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக நடிகையின் கணவர் மீது ஈரானிய பெண் பகீர் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில மாதங்களாகவே தலைப்பு செய்திகளில் அடிபட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ராக்கி சகியே, முத்திரை ஆகிய படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

நடிகை ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த்

நடிகை ராக்கி சாவந்த்திற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக ஆதில் துர்ரானியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறி, திருமண போட்டோவையும், திருமண சான்றிதழையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

என்னை தாக்கினார்

என்னை தாக்கினார்

இதையடுத்து, தனது கணவர் ஆதில் துர்ரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்துவிட்டார் என்று, நடிகை ராக்கி சாவந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நிர்வாண வீடியோவை விற்றார்

நிர்வாண வீடியோவை விற்றார்

இதையடுத்து, ஆதில் துர்ரானி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதிரடியாக நீதிமன்றம் வந்த ராக்கி சாவந்த், ஆதில் என்னை நன்றாக திட்டம் போட்டு ஏமாற்றி விட்டார். எனது நிர்வாண வீடியோக்களை பலருக்கு விற்றுவிட்டதாக புகார் கூயிருந்தார். அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டேன் ஆதிலுக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாது என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

ஏமாற்றி பலாத்காரம் செய்தார்

ஏமாற்றி பலாத்காரம் செய்தார்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆதில் துர்ரானி மீது ஈரானிய பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததாக மைசூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் நானும், ஆதிலும் மைசூரில் ஒன்றாக இருந்த போது, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டினார்

அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டினார்

நான் திருமணம் குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால்,என்னுடைய அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், என்னுடைய ஆபாச புகைப்படங்களை என் பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஈரானிய பெண் அளித்த புகாரின் பேரில் ஆதில் மீது மைசூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X