லாக்டவுனில் கூட தீயாய் வேலை செய்யும் எஃப்ஐஆர் டீம்.. முழுவீச்சில் எடிட்டிங்.. எடிட்டர் அதிரடி தகவல்!

சென்னை: லாக்டவுன் நேரத்தில் எஃப்ஐஆர் படத்தின் எடிட்டிங் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அப்படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vishal Vishal Jwala Gutta Announced Marriage date | Lock Down

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஃப்ஐஆர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு விஷால்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

எஃப்ஐஆர் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெப்பா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிரட்டியிருக்கிறார்.

இரண்டாவது லுக்

இரண்டாவது லுக்

விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் 2 ஆவது போஸ்டர் ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.

டீசர் மிரட்டல்

டீசர் மிரட்டல்

இதனை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. இதனை நடிகர்கள் ராணா, நிவின் பாலி, கிச்சா சுதீப், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் வெளியிட்டனர். எஃப்ஐஆர் படத்தின் டீசரே மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

வீடுகளில் முடக்கம்

வீடுகளில் முடக்கம்

இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் இந்தியாவில் லாக் டவுன் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடே முடங்கியுள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த அனைத்துப் பணிகளும் ரத்தாகியிருக்கிறது. திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

முழு வீச்சில் எடிட்டிங்

முழு வீச்சில் எடிட்டிங்

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் எஃப்ஐஆர் படத்தின் எடிட்டிங் வேலை இந்த லாக் டவுன் நேரத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அப்படத்தின் எடிட்டரான ஜிகே பிரசன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாடே நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்ட எடிட்டர் பிரசன்னாவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X