அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாத சாயம் பூசுவதை பற்றிப் பேசுகிறதா எஃப்ஐஆர்!
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தயாரித்து நடித்து வரும் திரைப்படம் எஃப்ஐஆர்
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தீவிரவாதத்தை பற்றி பேசும் படமாக உருவாகி உள்ளது
ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரேபா என மூன்று கதாநாயகிகள் படத்தில் நடித்திருக்க தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாத சாயம் பூசுவது பற்றியும் இப்படம் ஆணித்தரமாக பேச உள்ளது

தானே தயாரித்து வருகிறார்
நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமானதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வருகிறது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மிகச் சிறந்த கதைகளை தயாரித்து வருகிறார் பெரும்பாலும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் படங்களை தானே தயாரித்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படம் எஃப் ஐ ஆர்.

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில்
ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் இப்பொழுது தேர்ந்தெடுத்துள்ளது எஃப்ஐஆர் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் தீவிரவாதத்தைப் பற்றி பேசி உள்ளது. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்பது படங்களில் நீக்கப்பட்டதாக
எஃப்ஐஆர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஷ்ணு விஷாலின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இப்படம் உருவாகியுள்ளது. ராட்சசன் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது படங்களில் நடிக்க இருந்த விஷ்ணுவிஷால் அதிலிருந்து கடைசி சமயத்தில் நீக்கப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் இறுதியாக மனு ஆனந்த் இயக்கத்தில் தற்போது எஃப்ஐஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

எஃப்ஐஆர்
விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்க ரைசா வில்சன்,மஞ்சிமா மோகன், ரேபா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர் மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஃப்ஐஆர் படத்துக்காகவே விஷ்ணு விஷால் சிக்ஸ்பேக் வைத்து தாறுமாறாக தயாராகியுள்ளார்.

தீவிரவாத சாயம் பூசுவது
இந்த நிலையில் சமீபத்தில் எஃப்ஐஆர் படத்தின் தீம் சாங் வெளியானது. கேட்டவுடனேயே சிலிர்க்கும் வெறித்தனமான இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இப்பொழுது எஃப்ஐஆர் தீம் சாங் ட்ரெண்டிங்கில் இணையதளத்தை கலக்கிக்கொண்டு உள்ளது. எப்பொழுதும் கலகலப்பான படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால் இந்த முறை முற்றிலும் மாறுபட்ட திரில்லர் கதை களத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் விஷ்ணு விஷால் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாத சாயம் பூசுவது பற்றிய சில முக்கிய கருத்துக்களை இப்படம் பேச உள்ளது.


Click it and Unblock the Notifications











