பாலியல் வன்கொடுமை, மோசடி புகார்.. பிரபல நடிகரின் மகன், மனைவி மீது திடீர் வழக்குப் பதிவு!
மும்பை: பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மற்றும் மனைவி மீது, பாலியல் வன்கொடுமை, மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர், நடனம், ஆக்ஷன் காட்சிகளுக்காக ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்.
80 மற்றும் 90 களில் இந்தி சினிமாவில் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்த இவர், இந்தி தவிர, பெங்காலி, ஒரியா உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மும்பை தாதா
தமிழில், ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய 'யாகாவாராயினும் நாகாக்க' என்ற படத்தில் மும்பை தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. இதில் நிக்கி கல்ராணி, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். அதிகமான படங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் இவரும் இருக்கிறார். சுமார் 576 படங்களில் நடித்திருக்கிறார் மிதுன்.

ஊட்டியில் வசிக்கிறார்
மும்பையில் இவருக்கு வீடு இருந்தாலும் ஊட்டியில்தான் பெரும்பாலும் வசித்து வருகிறார். மிதுன் சக்கரவர்த்தியின் மகன், மஹாக்ஷய் (Mahaakshay). இவர் மீதும் இவர் அம்மா யோகீதா பாலி மீதும் இளம் பெண் ஒருவர், மும்பை போலீஸ் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார்.

மாத்திரை கலந்து
அதில், 2015 ஆம் ஆண்டில் இருந்து மஹாக்ஷய்யை காதலித்து வந்ததாகவும் ஒரு நாள் கூல்ட்ரிங்ஸில் போதை மாத்திரை கலந்துகொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறிய அவர் பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் அம்மா தன்னைக் கட்டாய கருக்கலைப்பு செய்ய சொல்லி மிரட்டினார் என்றும் கூறியிருந்தார்.

மிதுன் மகன், மனைவி
ஆனால், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து டெல்லிக்கு மாறிய அவர், அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மற்றும் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











