கஞ்சா தடைக்குப் பின்னால் பெரிய சதி இருக்காம்.. துளசியுடன் ஒப்பிட்ட நடிகை மீது வழக்குப் பதிவு!
சென்னை: கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்ட நடிகை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. இவர் தொடக்கத்தில் ஸ்மிதா என்ற பெயரில் நடித்து வந்தார்.
பிறகு நிவேதிதா என்ற பெயரில் நடித்தார். கன்னடத்தை அடுத்து தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி 2
கிஷோர் நடித்த போர்க்களம், நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, ஃபெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாததால், படங்களில் நடிக்காமல் இருக்கிறார். போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில், நடிகை ராகிணி திவிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகிணி திவிவேதி
இந்த போதைப் பொருள் வழக்கில் 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், நடிகை ராகிணி 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் குணம்
இந்நிலையில், கஞ்சா மருத்துவக் குணம் நிறைந்தது என்றும் அதைச் சட்டப் பூர்வமாக்க வேண்டும் என்றும் நடிகை நிவேதிதா கூறியிருந்தார். ஏற்கனவே போதைப் பொருள் குறித்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை நிவேதிகா இப்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தடைக்குப் பின் சதி
கஞ்சா பற்றி நடிகை நிவேதிதா கூறும்போது, 'தடை செய்யப்படுவதற்கு முன், பல்வேறு சிகிச்சைகளுக்கு கஞ்சாவைப் பயன்படுத்தி வந்தனர். கஞ்சாவை தடை செய்ததற்குப் பின்னால் சதி இருக்கிறது. சுமார் 40 நாடுகளில் இதைப் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இங்கும் சட்டப்பூர்வமாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

எப்படி ஒப்பிடலாம்?
இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலர் அவரை சரமாரியாக விளாசினர். கஞ்சாவுடன் புனிதமான துளசியை எப்படி ஒப்பிடலாம் என்றும் இதன் மூலம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும் கூறி, மல்லேஸ்வரத்தை சேர்ந்த தீபக் என்பவர் போலீசில் நிவேதிதா மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











