விஸ்வரூபம் எடுத்த சுஷாந்த் சிங் மரணம்.. ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடுத்த சுஷாந்த்தின் தந்தை

பாட்னா: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது.

Recommended Video

Sushan Singh வழக்கில் Mahesh Bhatt யை விசாரித்த Bandra Police

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு வந்த அவரது முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் சிங்கின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கொண்ட பாட்னா போலீசார் ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

Your Small Help can Provide Food to a Family! Kindly Help

கொலையா? தற்கொலையா?

கொலையா? தற்கொலையா?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் மறைந்து ஒரு மாதம் ஆன பின்னர், சுஷாந்த் சிங் மறைவுக்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும் என்றும், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். மேலும், எந்த காரணம் அவரை இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது குறித்தும் தனக்கு தெரிய வேண்டும் என்றும் கூறினார்.

40 பேரிடம் விசாரணை

40 பேரிடம் விசாரணை

சுஷாந்த் சிங் மரண வழக்கு பாலிவுட்டில் நெப்போடிச பிரச்சனையை கிளப்பி உள்ள நிலையில், அந்த வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் இதுவரை 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். ரியா சக்கரபோர்த்தி, சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, முகேஷ் சப்ரா, சேகர் கபூர், ராஜீவ் மசாந்த் மற்றும் மகேஷ் பட் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் அடக்கம்.

துணை முதல்வரின் மகன்

துணை முதல்வரின் மகன்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரியா சக்கரபோர்த்தியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த சிராக் பஸ்வான் மகாராஷ்ட்ர முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், மகாராஷ்ட்ராவின் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பர்த் பவாரும், சிபிஐ விசாரணையை வலியுறுத்தி உள்ளார்.

சுஷாந்த் சிங்கின் தந்தை தொடுத்த வழக்கு

சுஷாந்த் சிங்கின் தந்தை தொடுத்த வழக்கு

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரையும் அவரது குடும்பம் குற்றம் சாட்டாத நிலையில், தற்போது முதன்முறையாக நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை

ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை

பாட்னாவில் இருக்கும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசாரிடம் இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து இருப்பதால், 4 பேர் கொண்ட தனிப்படை குழு நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை செய்ய விரைந்துள்ளது. சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரபோர்த்தி பணம் எடுத்துள்ளதும், மன ரீதியாக சுஷாந்தை அவர் தான் டார்ச்சர் கொடுத்தார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X