வெளிநாடுகளிலும் புக்கிங் தாறுமாறு.. எஃப்ஐஆர் படக்குழு மகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எஃப்ஐஆர்.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீவிரவாதத்தை மிக வித்தியாசமான கோணத்தில் பேசியுள்ளது
ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா ஜான் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் இந்தியாவை தொடர்ந்து வெளி நாடுகளிலும் புக்கிங்கில் தாறுமாறு செய்து வருகிறது.

எஃப்ஐஆர்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். வெற்றி தோல்வி என இரண்டையும் மாறி மாறி கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக உள்ள விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை பெரும்பாலும் தயாரித்து வரும் விஷ்ணு விஷால் இப்பொழுது எஃப்ஐஆர் என்ற படத்தையும் நடித்து தயாரித்து உள்ளார்

அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீவிரவாதத்தை குறித்து மிக வித்தியாசமான கோணத்தில் பேசி உள்ளது. குறிப்பாக அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அவர்கள் எப்படி சிக்க வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாகப் பேசும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் முஸ்லிமாக நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, நீர்ப்பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,ராட்சசன் என தனது முந்தைய படங்களில் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிப்ரவரி 11 ரிலீஸ்
சென்ற வருடமே ரிலீசுக்கு தயாராக இருந்த இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என தகவல்கள் வெளிவந்தது ஆனால் படக்குழு தீர்க்கமாக மறுத்து இப்படம் நேரடியாக திரையரங்குகளில் மட்டும்தான் வெளியாகும் என உறுதியாக கூறியது. அதன்படி எஃப்ஐஆர் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகிறது . ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் மற்றும் ரெபா ஜான் என மூன்று ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஃப்ஐஆர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற இப்படம் ஏற்படுத்தியது .

வெளிநாடுகளிலும் பூக்கிங் படுஜோர்
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஓப்பனிங்கையும் பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படம் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ள நிலையில் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் மிக வேகமாக புக் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் பிப்ரவரி 11 வெளியாகிறது. எனவே இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் இப்படத்தின் புக்கிங் தாறுமாறு செய்துவருகிறது என விஷ்ணு விஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











