விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் OTTயில் ரிலீசா!?
சென்னை: மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் எஃப்.ஐ.ஆர்.
இந்த படத்தில் கௌதம் மேனன், கௌரவ் நாராயணன், மஞ்சிமா மோகன் ,ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனங்கள்
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் பின் வாங்க தொடங்கியுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக மீண்டும் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் OTT ரிலீசுக்கு கைமாறி வருகிறது.

சூழ்நிலை கருதி
தற்போது உள்ள சூழ்நிலை கருதி அடுத்தடுத்து படங்கள் OTT ரிலீசுக்கு தயாராகி கொண்டுள்ளது. ஜகமே தந்திரம் இந்த மாதம் Netflix ல் வெளிவரவுள்ள நிலையில் இன்னும் சில முக்கியமான படங்கள் OTTயில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

பரவிய தகவல்
இந்நிலையில் கடந்த வாரம் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் OTTயில் ரிலிஸ் என தகவல்கள் ட்விட்டரில் பரவ தொடங்கின. இந்த செய்தி ஒரு புறம் எதிர்பார்ப்பையும் கிளப்பி ரசிகர்களை மெருகேற்றியது. சில ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடிய வகையில் இருந்தது.
Recommended Video

மறுப்பு தெரிவிப்பு
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக எஃப்.ஐ.ஆர் வெளிவரும் என தகவல்கள் வந்த நிலையில் விஷ்ணு விஷால் தரப்பு அதனை முற்றிலும் மறுத்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலை சரியானதும் எஃப்.ஐ.ஆர் திரையரங்குகளில் வெளிவரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











