Don't Miss!
- News
மொத்தமா போங்க.. ஈரோட்டில் "ஃபுல் பவரை" இறக்கும் எடப்பாடி.. பெரிய பிளானாமே? மாஜிஸ் வேற வராங்களாம்!
- Sports
ஓரமாய் போய் நில்லுமா?.. பாக். தொகுப்பாளினிக்கு நடந்த காமெடி சம்பவம்.. இணையத்தில் ரசிகர்கள் சிரிப்பலை
- Automobiles
"ஏய் எப்புட்றா?"... இப்படியொரு பஜாஜ் ஸ்கூட்டரை உலகத்தில் எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க!! வேற லெவல்
- Finance
எகிறிய தங்கம் விலை.. இன்று மட்டும் எவ்வளவு அதிகரித்திருக்கு தெரியுமா.. இனி குறையவே குறையாதா?
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
- Technology
ஆபரை அள்ளி வீசும் அமேசான்: OnePlus ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.! முந்துங்கள்.!
- Lifestyle
பால் குடிக்கும் முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
நடிகை கனகா வீட்டில் தீ விபத்து..அனைத்துப்பொருட்களும் எரிந்து நாசம்.. ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : பிரபல நடிகை கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கனகா.
ரஜினி, விஜய்காந்த், சரத்குமார்,கார்த்தி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா
கரகாட்டக்காரன் கனகா மாதிரியே இருக்கீங்க.. ஓவர் மேக்கப்பில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் பிரபலம்!

நடிகை கனகா
மாங்குயிலே... பூங்குயிலே...சேதி ஒன்று கேளு என்ற பாடலை கேட்டதும் சட்டேன்று நினைவுக்கு வருவது கனகாவும் அவருடைய கோழிகுண்டுக் கண்ணும் தான்.1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கனகா, நடிகை தேவிகாவின் மகள் ஆவார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவருக்கு சினிமா துறையில் நுழைய ஈசியாக இருந்தது.

கரகாட்டக்காரன்
1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் உருவான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். கிராமி கலை கரகாட்டத்திற்கு புத்துயிரைப் பெற்றுத்தந்தது. இந்த படம் 425 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இதனால், கனகா தன் முதல் படத்திலேயே பெரிய அளவு ஸ்டார் ஆக மாறிவிட்டார்.

பல முன்னணி நடிகர்களுடன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர், ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், விஜயகாந்த்,சரத் குமார், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

திடீர் தீவிபத்து
பட வாய்ப்பு இல்லாததால் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிகை கனகா தலைகாட்டாமல் உள்ளார். இவர், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டில் இருந்து தீ பிடித்து புகை வெளியேறியது. இதனால் பதறிப்போன கனகா தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அனைத்துப் பொருட்களும் நாசம்
இதையடுத்து, விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில்,வீட்டின் பூஜை அறையில் விளக்கில் இருந்து தீப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால், வீட்டில் இருந்த அனைத்து துணிமணிகளும் எரிந்து நாசமாகிவிட்டது. இந்த விபத்தால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிஉள்ளனர்.