விறுவிறுப்பாக ஓடிய மலையாளப் படம்.. பற்றிக் கொண்ட தீ.. தெறித்து ஓடிய ரசிகர்கள்!

Recommended Video

ரிச்சுதமீன்ஸ் திரையரங்கில் தீவிபத்து -வீடியோ

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் உள்ள ரிச்சுதமீன்ஸ் திரையரங்கில் தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பானது.

Fire accident in Kaliyakkavilai theatre


கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் ரிச்சுதமின்ஸ் என்ற திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில் "எமன்டன் பிரேமகதா" என்ற மலையாள சினிமா முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

Fire accident in Kaliyakkavilai theatre


காட்சி துவங்கிய ஒரு மணி நேரத்தில் திடீரென கட்டுபாட்டு அறையில் இருந்து புகை கிளம்பியதை பார்த்த ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து கட்டுபாட்டு அறைக்கு சென்ற திரையரங்கு ஊழியர்கள் தீ அனைப்பான்கள் மூலம் புகை பரவிய பகுதியை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Fire accident in Kaliyakkavilai theatre


தொடர்ந்து தீ மளமளவென பரவியதால் கேரள மாநிலம் பாறசாலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு குழுக்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ பரவிய காரணமாக குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களும் இணைந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.

Fire accident in Kaliyakkavilai theatre


இந்த தீவிபத்து காரணமாக புரைஜட்டர் ஏசி உட்பட அறுபது லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது இதை தொடர்ந்து இன்றைய அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Fire accident in Kaliyakkavilai theatre

Fire accident in Kaliyakkavilai theatre

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X