கூலி படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து..என்ன நடந்தது?.. ரஜினி எப்படி இருக்கிறார்?
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகிவரும் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் இருக்கிறது. இந்தச் சூழலில் கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் பத்தாம் தேதி பிரமாண்டமாக படம் ரிலீஸாகவிருக்கிறது. ஜெய்பீம் படத்தின் இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மனசிலாயோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த்.

கூலி: படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில்கூட நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கான அறிவிப்பு போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பின.
தேவா ரஜினி: இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே தளபதி படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படமும், அதில் ரஜினிகாந்த்தின் நடிப்பும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கூலி படத்திலும் தேவாவாக ரஜினிகாந்த் கலக்குவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷுடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்திருப்பதாலும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
ஷூட்டிங் அப்டேட்: லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே கூலி படத்தில் கம்பேக் கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் லோகேஷ் தீவிரமாக உழைத்திருக்கிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதில் ரஜினிகாந்த்தும் கலந்துகொண்டு நடித்துவருகிறார்.
தீ விபத்து: இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் கூலி ஷூட்டிங் நடக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது விசாகப்பட்டினம் கடற்கரையில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்ததாகவும்; அப்போது சீனாவிலிருந்து லித்தியம் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு பெட்டக கப்பல் வந்ததாகவும்; அப்போது கொள்கலன் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதிலிருந்து ரஜினிகாந்த்தும், படக்குழுவினரும் பத்திரமாக தப்பித்துவிட்டார்கள் என்பதால் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











