twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?

    By
    |

    சென்னை: நடிகர் சங்க அலுவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அலுவலகம், தி.நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது

    தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    திடீர் தீ விபத்து

    திடீர் தீ விபத்து

    அங்கு இன்று காலை 6 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி தகவல் கொடுத்தார். இதையடுத்து தி.நகர் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    முக்கிய ஆவணங்கள்

    முக்கிய ஆவணங்கள்

    இருந்தும் இந்த விபத்தில் அலுவலகத்துக்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் உறுதியான காரணம் தெரியவில்லை.

    நிலுவையில் வழக்குகள்

    நிலுவையில் வழக்குகள்

    அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, வழக்குகள் தொடரப்பட்டன. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

    Recommended Video

    COMEDY படங்கள் மட்டும் நடிக்க காரணம் | ACTRESS DISHA PANDEY | FILMIBEAT TAMIL
    பாதுகாப்பு பெட்டகம்

    பாதுகாப்பு பெட்டகம்

    இதனால், இந்த தேர்தல் குறித்த முக்கிய ஆவணங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரசு அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறை சிறப்பு அதிகாரி ஒருவர், நடிகர் சங்க அலுவலகத்தை நியமித்து வருகிறார்.

    English summary
    Fire accident in south indian film actors association office in chennai T.Nagar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X