Just In
- 22 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அம்மா வீட்டில் பயங்கர தீ விபத்து: அழுகையும், கண்ணீருமாக ஓடி வந்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் அம்மா பிருந்தா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார். அவரின் தாய் பிருந்தா ராய் பந்த்ரா பகுதியில் உள்ள லா மெர் எனும் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 16 மாடிகள் கொண்ட லா மெர் கட்டிடத்தின் 13வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
|
போராட்டம்
தீ விபத்து குறித்து செய்தி அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

அபிஷேக்
தீ விபத்து தகவல் அறிந்த ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் லா மெர் கட்டிடத்திற்கு விரைந்து வந்தார். பயத்தில் அழுத ஐஸ்வர்யாவுக்கு அபிஷேக் ஆறுதல் கூறினார். திருமணத்திற்கு முன்பு ஐஸ்வர்யா இந்த வீட்டில் தான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமியார்
லா மெர் கட்டிடத்தில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்பு வசித்தார். அவரது மாமனார், மாமியார் தற்போது லா மெர் கட்டிடத்தில் வசித்து வருகிறார்கள்.

புகைப்படம்
லா மெர் வளாகத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராயை பார்த்த சச்சினின் மாமியார் சம்பவம் குறித்து விளக்கிய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.