ஒரே நேரத்தில் 2 நடிகைகள்! பவரைக் காட்டிய Fire பாலா.. மேல கை வச்சா தப்பானு கேட்கிறாரு.. வீடியோ இருக்கு

சென்னை: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் என பெரும்பாலான பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ஃபயர் படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் சிங்கம் புலி, காயத்ரி ஷா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் நாகர்கோவில் பகுதியில் இருந்த காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததை மையமாக கொண்டு விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டது. படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறியுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பாலா படத்தில் நடித்த இரண்டு நடிகைகளை ஒரே நேரத்தில் தூக்கினார். அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Fire Balaji Murugadoss Chandini Tamilarasan Sakshi Agarwal

படம் வெளியான பின்னர் ரசிகர்கள் பலரும் பாலாஜியும் படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள். குறிப்பாக பாலாஜியை தியேட்டர் வாசலில் ரசிகர்கள் வாழ்த்தியதால், தனது உழைப்பு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைத்ததை நினைத்து கண் கலங்கினார். மேலும் அவர் பேசும்போது, சினிமாவிற்குள் இளம் திறமையாளர்கள் வரும்போது, அவர்கள் தேறமாட்டார்கள், அவர்களுக்கு நடிக்கத் தெரியாது எனக் கூறி முத்திரை குத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் காலமும் வாய்ப்பும் கொடுங்கள். இந்த விமர்சனங்கள் பின்புலம் கொண்டவர்களுக்கு இருப்பதில்லை, பின்புலம் இல்லாதவர்களுக்கு மட்டும் இருப்பது ஏன் எனக் கூறினார்.

Fire Balaji Murugadoss Chandini Tamilarasan Sakshi Agarwal

பாராட்டு: படம் ரிலீஸ்க்கு முன்னர் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜே. சதீஷ் குமார் பாலாஜி குறித்து பேசும்போது, வெகுவாக பாராட்டினார். குறிப்பாக, " பாலாஜி நடித்துள்ள கதாபாத்திரம் என்பது மிகவும் சவாலான கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. உடன் நடிக்கும் நடிகைகளுக்கு முதலில் சௌகரியமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்படி இருக்கும் போது தான், இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்க முடியும். அந்த வகையில் பாலாஜி தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுக்கும் சௌகரியமான சூழலை உருவாக்கினார். பாலாஜிக்கு நான் சொன்ன சம்பளத்தை விடவும் அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க வேண்டும்" என பாராட்டினார்.

Fire Balaji Murugadoss Chandini Tamilarasan Sakshi Agarwal

கிளாமர்: படம் விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் குறித்த அப்டேட்டுகள் பலவும், கிளாமரை மையமாகக் கொண்டு தான் இருந்தது. குறிப்பாக ரச்சிதா மகாலஷ்மியின் கிளாமர் நடனம், நெருக்கமான காட்சிகளைத்தான் படத்தின் புரோமோசனுக்கு அதிகமாக பயன்படுத்தினார்கள். அப்படி இருக்கும் போது, ரசிகர்கள் பலரும் இணையத்தில் படம் ரிலீஸ்க்கு முன்னர் ரச்சிதாவின் கிளாமர் குறித்துதான் பேசினார்கள். மேலும் படம் வெளியான பின்னர், ரச்சிதாவை போல் படத்தில் நடித்த மற்ற நடிகைகளின் கிளாமர் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது என்ற பேச்சு வேகமாக பரவியது. இதன் காரணமாகவும் படத்தை பார்க்க கணிசமான அளவில் ரசிகர்கள் திரண்டார்கள்.

Fire Balaji Murugadoss Chandini Tamilarasan Sakshi Agarwal

வீடியோ: படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சுமார் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில், படத்திற்கு விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் கிடைத்ததால், படக்குழு மகிழ்ச்சி அடைந்தனர். படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி, நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது படத்தில் நடித்த நடிகைகளான சாக்‌ஷி அகர்வால் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோரை பாலாஜி ஒரே நேரத்தில் தூக்கினார். இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாலாஜி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் பாடலான, உன்மேல ஆசைதான் பாடலில் வரும் என் எதிரே 2 பாப்பா... கை வச்சா என்ன தாப்பா" என்ற பாடல் வரிகளையும் சேர்த்து, வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், தப்பே இல்லை எனவும், மசால் வடை சைஸ்க்கு உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை சாந்தினி தமிழரசன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Fire Balaji Murugadoss Chandini Tamilarasan Sakshi Agarwal

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X