Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்!

சென்னை : தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியதைப் போலவே, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மொழியில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. அதேபோன்று கன்னட மொழியில் நடத்துவதற்கு பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள இன்னோவேட்டிவ் ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட வீட்டில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

கன்னட பிக்பாஸ்
கர்நாடக மாநிலம் பிடதி அருகே 'இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி' உள்ளது. இங்கு தான் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு பல கோடி ரூபாய் செலவில் வீடு போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

பிரமாண்ட செட்
முதல் 2 ஆண்டுகள் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி புனேயில் தான் நடத்தப்பட்டது அதன்பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் தான் 5-வது ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிறைவு பெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கை மக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் தீ
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்தப் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட அரங்குக்கும் தீ பரவி எரிந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரவிய தீ
பிக்பாஸ் வீடு எடை குறைவான பலகைகள் மற்றும் தெர்மாகோல் வைத்து அமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், பிடதி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். உடனே போலீசார் மற்றும் வீரர்கள் விரைந்து வந்தார்கள்.

போலீசார் விசாரணை
அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பிக்பாஸ் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. சேத மதிப்பு சுமார் 8 கோடி என்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து பிடதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.