சமந்தா மாமனாரின் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் உள்ளது. அந்த ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போராட்டம்
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை வீரர்கள் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

நாசம்
ஸ்டுடியோவில் இருந்த 2 படங்களின் செட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. அதில் ஒன்று நாகர்ஜுனா தனது மகன், அப்பாவுடன் சேர்ந்து நடித்த மனம் படத்தின் செட் ஆகும்.

நாகர்ஜுனா
2 செட்டுகள் எரிந்தபோது அங்கு யாரும் இல்லை. அதனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செட்டுகள் எரிந்ததில் நாகர்ஜுனாவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சொத்து
நாகர்ஜுனாவின் அப்பா நாகேஸ்வர ராவ் அகினேனி துவங்கிய அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படங்கள், ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் என்று ஏதாவது ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











