பிரபல நடிகை வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. விரைந்து அணைத்த வீரர்கள்.. உருக்கமான நன்றி!

By

மும்பை: பிரபல நடிகையின் வீட்டில் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

தமிழில் சூப்பர் ஹிட்டான அவ்வை சண்முகி திரைப்படம், இந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் ரீமேக் ஆனது.

1997 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் கமல்- தபு குழந்தையாக நடித்திருந்தவர், பாத்திமா சனா ஷேக்.

தங்கல் நடிகை

தங்கல் நடிகை

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர், ஆமிர்கானின் 'தங்கல்' படத்தில் கீதா போகட் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து பிரபலமானார், பாத்திமா சனா ஷேக். அடுத்து, தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தில் ராஜகுமாரியாக நடித்து இருந்தார். அமிதாப் பச்சன், ஆமிர்கான், கேத்ரினா கைஃப் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

சுராஜ் பே மங்கள் பாரி

சுராஜ் பே மங்கள் பாரி

அனுராக் பாசு இயக்கத்தில் இவர் நடித்திருந்த லுடோ, நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோயினாக நடித்த, சுராஜ் பே மங்கள் பாரி படம், கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், மூன்று வயதிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

பாலியல் சீண்டல்கள்

பாலியல் சீண்டல்கள்

'எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றி பேசுவதில்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிக விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தப் பிரச்சனையை நானும் எதிர்கொண்டேன்' என்று கூறியிருந்தார்.

திடீர் தீ விபத்து

திடீர் தீ விபத்து

மும்பையில் வசித்து வரும் பாத்திமா சனா ஷேக்கின் வீட்டில், கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார், பாத்திமா.

உருக்கமான நன்றி

உருக்கமான நன்றி

அவர் அதில், திடீரென தீவிபத்து ஏற்பட்டுவிட்டது. பீதியுடன் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் உடனடியாக வந்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களுக்கு மிக்க நன்றி என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X