தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு.. ப்பா.. சுரேஷை வெளுத்தும், பாராட்டியும் பேசிய கமல்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் குரூபிஸம் இருக்கு என நிகழ்ச்சி தொடக்கத்திலேயே சரவெடியை கையில் எடுத்துக் கொண்டு வந்து வெடி போட்ட கமல்ஹாசன், தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு சுரேஷ் என செம பஞ்ச் கொடுத்தார்.
வீக்கெண்ட் ஆனாலே பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கிரேஸ் வந்து விடும். அதற்கு காரணம் அனைவருக்கும் தெரிந்ததே..
இந்த வாரத்தில் நடந்த எல்லா பிரச்சனை குறித்தும் கமல் பேசுவார் என தெரிகிறது.

எம்.ஜி.ஆர் மாதிரி
எம்.ஜி.ஆர் மாதிரி கழுத்தில கர்ச்சீப், கண்ணுல கருப்பு கண்ணாடி மாட்டிக் கொண்டு செம ஸ்டைலாக கமல்ஹாசன் இந்த எபிசோடில் என்டர் ஆனார். அகம் டிவி வழியே அகத்துக்குள் பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்து பேசிய கமலை பார்த்த போட்டியாளர்கள், சூப்பர் லுக் சார் என பாராட்டினார்கள். கேக்கல சத்தமா சொல்லுங்க என மீண்டும் கேட்டு ஹேப்பியானார்.

இந்த வீட்ல குரூபிஸம் இருக்கு
பாலிவுட்டை சமீபத்தில் ஆட்டி படைத்த நெபோடிஸம் பிரச்சனையை பிக் பாஸ் வீட்டுக்குள் குரூபிஸமாக கொண்டு வந்துவிட்டார் டைரக்டர் என்று கடந்த சில எபிசோடுகளை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். குரூபிஸம் பிரச்சனை குறித்து கமல் கேட்பாரா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், வந்ததும் வராததுமாக அதை பற்றியே பேசி உள்ளே நுழைந்தார் கமல்.

ரியோவுக்கு சவுக்கடி
குரூபிஸம் என சுரேஷ் சொல்லும் போது, நீங்களாகவே ஏன் ரியோ அந்த தொப்பியை உங்க தலையில வாங்கி மாட்டிக்கிட்டீங்க என கமல் நறுக்கென சவுக்கடி கொடுப்பது போல கேட்டு, விஜய் டிவியின் பொம்மையன ரியோ ராஜுக்கு செம நோஸ் கட் கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கினார். சுரேஷ் சக்கரவர்த்திக்கு அந்த இடத்தில் சப்போர்ட் பண்ணார்.

வேட்டி மேட்டர்
பின்னர், வேட்டி மேட்டர் பற்றி பேசி, வேல் முருகன் சுரேஷ் பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண கமல் ஹாசன், மொட்டை தல சுரேஷுக்கு செம குட்டு வைத்து அதிரடி காட்டினார். தொடர்ந்து, மொட்டை தாத்தா சுரேஷையே ரவுண்டு கட்டி கமல் பேச பேச சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

தீபாவளிக்கு முன்பே
சொல்லி சொல்லியே வெடி போட்டு வருகிறார் சுரேஷ். பற்ற வைக்காத வெடிகளையும் அப்படியே வீசி விடுகிறார். அதை பிடித்தும் என்ஜாய் பண்ணியும் செய்கிறார். தீபாவளிக்கு முன்பே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார் சுரேஷ் என தட்டியும் கொடுத்து, தட்டியும் கேட்டு கமல் அரங்கை அதிரவைத்தார்.


Click it and Unblock the Notifications











