திடீரென வீட்டைச் சுற்றிய வெள்ளம்.. சிக்கிக்கொண்ட பிரபல நடிகை.. அதிரடியாக மீட்ட தீயணைப்புத் துறை!
திருவனந்தபுரம்: மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பிரபல ஹீரோவின் அம்மாவை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
Recommended Video
பிரபல மலையாள நடிகை மல்லிகா சுகுமாரன். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், நடிகர் பிருத்வி ராஜின் அம்மா.
பிருத்விராஜ், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர்.

வாழ்த்துக்கள்
இவரது மற்றொரு மகன் இந்திரஜித்தும் நடிகர்தான். இவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் என் மனவானில், சர்வம், குயின் வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார். மல்லிகா சுகுமாரன் தமிழில் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தில் நடித்திருந்தார். பல மலையாள டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடும் மழை
திருவனந்தபுரத்தில் உள்ள குண்டமன்கடவு பகுதியில் வசித்து வருகிறார், மல்லிகா சுகுமாரன். இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரால் சூழ்ந்ததை அடுத்து தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மல்லிகா சுகுமாரன் உட்பட வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

முன்னறிவிப்பு
பின்னர், ஜவஹர் நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு நடிகை மல்லிகா சுகுமாரன் அழைத்துச் செல்லப்பட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, 'எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அணையின் ஷட்டரை திறந்து விட்டதால்தான் வெள்ளம் சூழ்ந்து விட்டது. என் வீட்டுக்குப் பின்னால் உள்ள கால்வாயை சரி செய்யுமாறு பலமுறை கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

மழை வெள்ளம்
நடிகை ஒருவர் வெள்ளம் காரணமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதும் இந்தப் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்து கொண்டது. அப்போதும் நடிகை மல்லிகா சுகுமாரன் அந்தப் பகுதியினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











